மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் (3.3.2026) அன்று சென்னை, அசோக் நகர் முதல்வர் படைப்பகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக 18.87 கோடி ரூபாய் செலவில் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் 9 முதல்வர் படைப்பகங்கள் கொண்ட நவீன நூலகங்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 424 கோடி செலவில் ஒரு முதல்வர் படைப்பகம் கொண்ட நவீன நூலகம் ஆகியவற்றை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழும தலைவருமான திரு. பி.கே.சேகர்பாபு மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.கருணாநிதி, துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், சென்னை மாநகர நூலக ஆணையக் குழு உறுப்பினர் கவிஞர் மனுஷ்யபுத்திரன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.செயலாளர் திருமதி காகர்லா உஷா, இ.ஆ. ப, பள்ளிக்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன்,இ.ஆ.ப, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் உறுப்பினர் செயலர்முதன்மைச் செயலாளர் திரு.கோ.பிரகாஷ் இ.ஆ. ப, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
