சென்னை, இராய பேட்டையைச் சேர்ந்த M.சிவகணேசன், ஆ/வ.38 என்பவர் RMC Traders Company பங்குதரார் என்றும் தன் நிறுவனத்தின் சார்பாக நீலாங்கரையில் கபாலீஸ்வரர் நகர் என்ற பெயரில் 60 ஏக்கரில் மனைப்பிரிவு (லேஅவுட்) போடப்பட்டுள்ளது.
அந்த மனைப்பிரிவின் முன் பகுதியில் உள்ள 1,050 சதுர மீட்டர் இடத்தை அரசு சாலை விரிவாக்கத்திற்கு நெடுஞ்சாலை துறை கையகப்படுத்தியதாகவும் அதற்கு ஈடாக அரசு ஒதுக்கீடு செய்த இழப்பீடு தொகை ரூ.16 கோடியை எதிரி நடராஜன் என்பவர் போலியான ஆவணம் மூலம் அரசுக்கு நில ஒப்படைப்பு செய்வதாக விற்பனை பத்திரம் நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொடுத்து சட்டவிரோத இழப்பீடு தொகையை பெற்றுள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி சோழிங்கநல்லூர் கனம் District Munsif court ல் நடவடிக்கை வேண்டி தாக்கல் செய்த மனுவின் உத்தரவின் அடிப்படையிலும் கடந்த 10.02.2025ந் தேதி அன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் அளித்த புகார் மீது, சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு நிலமோசடி புலனாய்வு பிரிவு, (LFIW) காவல் உதவி ஆணையாளர் அவர்களால் வழக்குப்பதிவு செய்து, காவல் ஆய்வாளரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண் இ.கா.ப அவர்களின் உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் திருமதி.A.ராதிகா, இ.கா.ப., அவர்கள் வழிகாட்டுதலின்பேரில், நிலமோசடி புலானாய்வு பிரிவு காவல் உதவி ஆணையாளர் மேற்பார்வையில், நிலமோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, வழக்கு சொத்து சம்பந்தமான ஆவணங்களை ஆய்வு செய்ததில் ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த எதிரி நடராஜன் என்பவர் ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் இடத்தினை பதிவு செய்து, பின்னர் மேற்படி சொத்தை நெடுஞ்சாலை துறைக்கு ஒப்புவித்து, சுமார் ரூ.16 கோடி அரசு வழங்கிய பணத்தை முறைகேடாக பெற்றதும் தெரியவந்தது.
அதன்பேரில், இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த எதிரி சி.ஆ.நடராஜன், ஆ/வ55, த/பெ.அம்பலவாணன், ஆழ்வார் திருநகர், சென்னை என்பவரை காவல் குழுவினர் (02.12.2025) தேனாம்பேட்டை பகுதியில் கைது செய்து விசாரணை செய்தனர்.
கைது செய்யப்பட்ட எதிரி நடராஜன் விசாரணைக்குப் பின்னர் (02.12.2025) கனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் (CCB & CBCID), எழும்பூர் அவர்கள் முன்பு ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
