மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் ஆதரவற்ற நிலையில் மூதாட்டி ஒருவர் கிடந்துள்ளார்.
இது குறித்து தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாரதிமோகன் அறக்கட்டளை நிறுவனர் பாரதிமோகன் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த அவர் மூதாட்டியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
பின்னர் அவரது செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தார் இதனைப் பார்த்த கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுக்கா அங்கு செட்டி பாளையம் முருகன் கோவில் தெருவை சேர்ந்த ரங்கநாயகி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவரின் தம்பி ஆரோக்கியசாமி, தம்பி மகன் கண்ணன் ஆகியோர் அறக்கட்டளையின் நிறுவனர் பாரதிமோகனை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் அந்த மூதாட்டியை மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டு காவல்துறை உதவி ஆய்வாளர் அருண்குமார் முன்னிலையில் தம்பி மற்றும் தம்பி மகனிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதுகுறித்து அறக்கட்டளையின் நிறுவனர் பாரதிமோகன் கூறுகையில் முதியவர்களை அவர்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பது காப்பகத்தில் சேர்ப்பது ஆதரவற்ற நிலையில் சாலை ஓரங்களில் யாசகம் எடுப்பவர்களுக்கு மதிய உணவு உள்ளிட்ட உதவிகளை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி செய்து வருவதாக கூறினார்.
