கடற்கரையை ஒட்டிய மாவட்ட, மீனவர் கிராமத்தவர்களின், உடற்திறன், கபாடி எப்போது சிறப்பானது, டிபன்ஸ் தனித்தன்மை வாய்ந்தது…
மேற்கண்ட சிறப்புமிக்க நாகபட்டினத்தில் இருந்து பிரிந்த மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, ஆர்பாக்கத்தில் 1981 ஆம் ஆண்டு பிறந்தவர். தற்போது தஞ்சை மாவட்டம், நாச்சியார்கோயில் காவல்நிலைய ஆய்வாளராக(Inspector) பணியாற்றி வருகிறார்..
தனது பள்ளிப்படிப்பை SMHS பள்ளி, சீர்காழியில் முடித்தவர்.. AVC கல்லூரி மயிலாடுதுறையில் B.Com படிப்பை முடித்தவர். கோவை, மாருதி உடற்கல்வி கல்லூரியில் B.PEd., படிப்பை முடித்தவர். பின்பு M.PEd, M.Philயை சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முடித்தவர். இவரின் தந்தை அன்பழகன் (இவரும் ஓர் கபாடி வீரர்) அவர்களால் தொடங்கப்பட்ட அன்பு பிரதர்ஸ், ஆர்பாக்கம் அணியில் கபாடி பயணத்தை தொடங்கியவர்.
ஒருங்கிணைந்த நாகபட்டின மாவட்ட கபாடி அணிக்காக பல முறை ஆடியவர். தமிழக அணிக்காக தேசிய சீனியர் பிரிவில் விளையாடியவர்.
2002-ல் பாரதியார் பல்கலைகழக அணிக்காக, அகில இந்தியா பல்கலைகழக போட்டியில் கலந்து கொண்டவர். 2005-ல் நடைபெற்ற அகில இந்தியா பல்கலைகழக போட்டியில் அண்ணாமலை பல்கலைகழக அணி, இரண்டாம் இடம் பெற்றது. இந்த தொடரில் Runnerup ஆனாலும், சிறப்பாக விளையாடி, தொடர் நாயகன் விருதினை ராஜேஷ்(சுமன்) அவர்கள் பெற்றது, மிகச்சிறப்பு…
இந்திய பல்கலை கழக கபாடி அணிகளின் சிறந்த கபாடி வீரர் விருது பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். 2008-ம் வருடம் தமிழக காவல்துறையில், இவர் Sports Quota-வில் SI ஆக வேலை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடன், சிறந்த கபாடி வீரர்கள் கன்னியாகுமரி, ஜானி செல்லப்பா, திருச்சி கார்த்தி, திண்டுக்கல் ரஞ்சித்பாபு,நெல்லை சுடலைமணி, வடுவூர் இளங்கனி, மதுரை ரமேஷ்குமார் என 7 பேர் SI ஆக Sports Quota வில் தேர்வு பெற்றார்கள் என்பது சிறப்பு.
இவர் சிறந்த லெப்ட் கார்னர் + ரைடர், (ஆல்ரவுண்டர்) ஆவர்.. கிப் (இடுப்பை பிடித்தல்) எடுத்தலில் (Waist hold) மிகச் சிறந்த தனித்தன்மையான தலைசிறந்த வீரர்…
தமிழகத்தின் மிகச்சிறந்த வீரர்களான (ரைடர்கள்), மறைந்த சுரேந்திரமுகன், காவல்துறை மேட்டூர் ராஜா, இந்திஜித், பாப்பம்பட்டி பழனிச்சாமி என பலரின் ஆட்டம் தனக்கு பிடிக்கும் என்றும், ICF சுரேஷ், வடுவூர் முத்து, என பல வீரர்களின் தடுப்பாட்டமும் தனக்கு பிடிக்கும் என தெரிவித்தார்.
தனது கபாடியின் ரோல்மாடல் தனது தந்தை அன்பழகன் என தெரிவித்தார். அவரும் சிறந்த கபாடி வீரர் (ஆசிரியர்) என்பது குறிப்பிடத்தக்கது.
தனது கபாடி வாழ்வில் பயணித்த, பயிற்சியாளர்கள், வழிகாட்டிகள், நண்பர்களுமான, அண்ணாமலை பல்கலைகழக பாலமுருகன், குலோத்துங்கன், சுப்பிரமணியம், வல்லம் ஆசைத்தம்பி, மாயவரம் சசிக்குமார், ஹென்றி மற்றும் நாகை, மாயவரம் கபாடி நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல தெரிவித்தார்.
இளம் தலைமுறை வீரர்கள், எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல், கடினமாக பயிற்சி, விடாமுயற்சி உடன் செயல்பட்டால், உங்கள் கபாடி மற்றும் வாழ்வு சிறக்கும் என அறிவுறுத்தினார்…
இன்றும் இளம் கபாடி வீரர்களை ஊக்கப்படுத்துவது, தனது சொந்தஊர் அணிக்கு வழிகாட்டுவது என கபாடி உடன் தொடர்ச்சியான தொடர்பில் உள்ள நல் உள்ளம்படைத்தவர்.. பணிச்சுமையினால் பயிற்சி அளிக்க முடியவில்லை என ஆதங்கப்பட்டார்.
உங்கள் காவல்துறை பணி உடன், கபாடி பணியும் சிறக்க வாழ்த்துகிறோம்.
