போலீஸ் கடமைக்கு பணி செய்கிறதா, கடமையை செய்ய தவறுகிறதா?
தமிழகத்தில் காவல்துறை செயல்பாடுகளால் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் மதிப்பு குறைந்து வருவதை நாடு அறியும் இந்த நிலையில் காவல்துறை உங்கள் நண்பன் என்ற போலீசாரின் விளம்பரத்தை பொய்யாக்கும் செயல்கள் அங்கொன்றும் இங்கொன்றும் அதிகரிக்கப்பதை காண முடிகிறது.
இது ஒர் புறம் இருக்க, தமிழகத்தில் சாலை விபத்துகள், இன்னும் பல விபத்துகளால் காயம் அடைந்தவர்கள் அவசர மருத்துவ உதவி பெறவும் அரசு அல்லது தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று பின் மருத்துவர்கள் பரிந்துரை படி உயிர் காக்க மேல் சிகிச்சை பெற அவசர, அவசரமாக பெரிய மருத்துவமனைகளை நாடி செல்வார்கள். அரசின் மருத்துவமனை, மற்றும் உயிரை காக்க பணத்தை செலவு செய்து தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவார்கள். அப்படி மருத்துவ சிகிச்சை பெற்றும் உயிரிழந்தவர்கள் உடலை காவல்துறைக்கு தகவல் தெரிவித்து விடுவார்கள். அதன்படி இறந்தவர்களின் உடலை போலீஸ் பெற்று அரசு மருத்துவமனையில் உள்ள உடற்குறு ஆய்வுக்கு, பிரேத பரிசோதனை செய்ய கொண்டு செல்லுவார்கள். அங்கே உள்ள பிரேத பரிசோதனை மருத்துவ குழு, முதலில் போலீசாரிடம் AR ரிப்போர்ட்டை அதாவது ஆண்டி மார்ட்டம் (Anty Mortem) இறந்தவரின் இறப்புக்கு முன் ஏற்பட்ட காயங்கள் குறித்த அறிக்கை கேட்பார்கள். அந்த அறிக்கையை விபத்தில் இறந்த நபர் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் இருந்து பெற்று தர வேண்டியது காவல்துறையின் பணி, ஆனால் இதை செய்ய போலீசார் என்னவோ அலைகழிப்பு செய்து காலதாமதம் படுத்தி இறந்தவரின் குடும்பத்தினரை பிரேத பரிசோதனை அறை முன் இரண்டு, மூன்று நாட்கள் காக்க வைக்கின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்படுவதாக குற்றச் சாட்டுகள் எழுவதை காண முடிகிறது.
இதை விட கொடுமை என்ன வென்றால் விபத்து நடந்த இடமும், விபத்தில் காயம் பெற்றவர்கள் சிகிச்சை பெற்ற இடமும் வெவ்வேறு காவல் நிலைய எல்லையில் என்றால் அவ்வளவு தான் காவல் நிலையங்கள் இடையே நடக்கும் அக்கபோரால், அப்பாவிமக்கள் தான் அவதி படுவார்கள் என்பதை அறியாத காவல்துறை அதிகாரிகள் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினர் கூறியதாவது, எங்க அண்ணன் வெளியூரில் உள்ள உறவினர்களை பார்த்து நலம் விசாரிக்க வாகனத்தில் சென்ற போது சாலை விபத்தில் சிக்கி பெரும் காயம் ஏற்படுகிறது, உடனே அருகே உள்ள அரசு மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார், சிகிச்சை பெற்ற மருத்துவ மனை கிராமத்தின் சின்ன மருத்துவ மனை என்பதால், விபத்தில் சிக்கியவரின் உயிரை காக்க மேல்சிகிச்சை பெற பக்கத்துல உள்ள பெரிய மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தோம், ஆனால் இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்து விட்டார், விபத்தில் சிகிச்சை பெற்றவர் என்பதால் போலீசார் மூலம் உடலை பிரேத பரிசோதனை செய்ய எடுத்து சென்றனர்.
அதற்கு பிறகு தான் போலீசாரின் வேலையே ஆனால் அதனை மனிதநேயத்துடன் கூட செய்ய முன் வராமல் காலம் தாழ்த்துவது கொடுமையிலும் கொடுமை இதை எங்கே போய் சொல்லுவது, உடலை பிரேத பரிசோதனை செய்யும் முன்னர் மருத்துவர்கள் கேட்ட AR ரிப்போர்ட்டை போலீசார் தான் முதலில் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் இருந்து வாங்கி தரனும் என்பது அவங்க மரபு அதை கொடுத்தால் தான், மருத்துவர்கள் உடலை பிரேத பரிசோதனையின் போது விபத்து காயங்களை கண்டு அறிந்து அதற்குரிய காரணங்களை ஆய்வு செய்து பின் பிரேத பரிசோதனை அறிக்கையை தருவாங்க, ஆனால் இந்த போலீஸ் காரங்க நான்கு நாட்களாக பிரேத அறை முன்னே இரவு பகலும் காக்க வைக்கிறாங்க, இதுல விபத்து நடந்த இடமும், சிகிச்சை பெற்று இறந்த இடமும் காவல்நிலைய எல்லை வேறவேற என்றால் அவ்வளவு தான் நம்பல பைத்தியம் ஆக்கிவிடுங்க இந்த போலீஸ், மனித நேயத்துடன் செய்ய வேண்டிய வேலையை போலீசார் அலைகழிப்பு செய்வது என்ன நியாயம், விபத்தில் இறந்தவர் உடலை பிரேத பரிசோதனை செய்யும் முன் இது போன்ற தகவல்களை ஒப்படைக்கனும் என்பது எங்களுக்கு தெரியுமா, நான்கு நாட்கள் கழிச்சு பிரேத அறையில் இருந்து உடலை வாங்கும் போது எங்க உசுரே போச்சு என கண்ணீர் விட்டு அழும் அவலத்தை காண மனம் இல்லாமல் கலங்கி நின்றோம்.
முதல்வர் ஸ்டாலின் கையில் வைத்திருக்கும் காவல்துறை யை மக்கள் நலன் காக்க இது போன்ற காவல் நிலைய செயல்பாடுகளை தவிர்க்க, வெள்ளைக்காரன் விட்டு சென்ற காவல் சட்டத்தை திருத்தம் செய்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் நன்மை கிடைக்கும், எத்தனையோ திட்டங்களை கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின் இது போன்ற மக்கள் பயன் பெறும் வகையில் விபத்தில் இறந்தவர் உடலை பெற காவல்நிலையங்களை ஒருங்கிணைத்து ஆன்லைன் முறைகளை நடைமுறை படுத்த சட்டம் கொண்டு வந்தால் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையும், அவரது குடும்பத்தினரும் நன்றி கூறுவார்கள் வரும் சட்டமன்ற கூட்டத்தில் இதற்கு முன் வடிவம் தருவாறா பார்க்கலாம்.
இனியாவது காவல்துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்தால் நல்லது இல்லை என்றால் காவல்துறையினரை பொதுமக்கள் திட்டுவது நியாயம் என்பது ஆகிவிடும், கண் திறந்து பாருங்க ஆபீசர்..
