இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சிமைய இயக்குனர் அங்கையற்கண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை, மருத்துவக் கல்லூரிசாலை, ஈஸ்வரி நகர், 4 பக்கிரிசாமி பிள்ளை தெருவில் இயங்கி வரும் சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் தற் போது 30 நாட்கள் நான்குசக்கர வாகன ஓட்டுனர் பயிற்சி வகுப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் வாகனங்களை பராமரித்தல், பழுது பார்த்தல், ஓட்டுனருக் கான அடிப்படை வசதிகள், தற்காப்பு ஓட்டுதல், பராமரிப்பு மற்றும் எளிய வழிமுறை, மோட்டார் வாகன சட்ட அடை யாளங்கள் மற்றும் சின்னங்கள், ஸ்டியரிங் வீலைப் பிடித்துக் கொண்டு தள்ளுதல் உள்பட பல நுணுக்கங்கள் கற்றுத்தரப் படும். இப்பயிற்சியை முழுமையாக நிறைவு செய்தவர்களுக்கு வாகன ஓட்டுனர் உரிமை பெற்றுத்தரப்படும்.
இருவேளை தேநீர், மதிய உணவு, மற்றும் பயிற்சிக்கான உபகரணங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். மேற்கண்ட பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் 8-ந்தேதி ஆகும். இந்த பயிற்சியில் 18 முதல் 45 வயது வரை உள்ள தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மேற் கண்ட மையத்தை தொடர்புக் கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
