தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலக பகுதியில் முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசின் பதிவுதுறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக முத்திரைத்தாள் விற்பனையாளர் காலிபணியிடங்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவங்களை 11ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்படும். விண்ணப்பத்தை வரும் பிப்ரவரி 12ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவு தபாலிலோ விண்ணப்பதாரர்கள் அனுப்ப வேண்டும்.
இது தொடர்பாக தமிழக அரசு பதிவுத்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு பதிவுத்துறையின் கீழ் செயல்படம் சார்பதிவாளர் அலுவலக ஆட்சி எல்லைக்குட்பட்ட முத்திரைத்தாள் விற்பனையாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதிவு மாவட்ட வாரியாக காலி பணியிட விவரங்கள், வட சென்னை-31. தென் சென்னை-38, மத்திய சென்னை-21. காஞ்சிபுரம் -51. செங்கல்பட்டு-5. வேலூர் -58, அரக்கோணம் -5, செய்யாறு-39, திருவண்ணாமலை-8, சேலம் (கிழக்கு) -8, சேலம் மேற்கு 10, நாமக்கல்-16, தர்மபுரி-9, கிருஷ்ணகிரி -11, கடலூர்-11, விழுப்புரம்-6
சிதம்பரம் -4, திண்டிவனம்-3, கள்ளக்குறிச்சி-9, விருத்தாச்சலம்-19, திருச்சி-60, புதுக்கோட்டை 11, அரியலூர் 23, கரூர் -4, தஞ்சாவூர் -8, கும்பகோணம்-4, நாகப்பட்டினம்-6, பட்டுக்கோட்டை-4, மயிலாடுதுறை -4, கோவை 106, திருப்பூர்-34, ஈரோடு 10, கோபிச்செட்டிபாளையம் 6, ஊட்டி-1, திண்டுக்கல்-21, காரைக்குடி-8,
மதுரை வடக்கு 4, மதுரை தெற்கு 15, பழனி 18, பெரியகுளம் 8, இராமநாதபுரம் 19, சிவகங்கை 8, விருதுநகர் 12, திருநெல்வேலி 5, பாளையங்கோட்டை 12, சேரன்மகா தேவி 3, தென்காசி 2, தூத்துக்குடி 1, கன்னியாகுமரி 9, மார்த்தாண்டம் -8,
எப்படி பெறுவது?
(குறிப்பு சார்பதிவாளர் அலுவலக வாரியான காலியிட விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்). விண்ணப்ப படிவங்களை 03.2.201ம் தேதி முதல் 11.02.2021 தேதி முடிய காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், 12.02.2021 தேதி காலை 10 மணி முதல் மதியம் 1மணி வரையிலும் சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 12.02.2021ம் தேதி மாலை 5மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் சமர்பிக்க வேண்டும்“ என்று பதிவுத்துறை தலைவர் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையே பதிவுத்துறை தலைவர் சங்கர் அனைத்து மண்டல டிஐஜி, மாவட்ட பதிவாளர்களுக்கு அண்மையில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் : பதிவுத்துறையில் காலியாக உள்ள 1376 முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்குட்பட்ட முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிடம் நிரப்ப முத்திரை சட்ட விதி 25ன் படி தகுதி பெற்ற நபர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட வேண்டும். முத்திரை சட்ட விதிப்படி, போதிய கல்வித் தகுதி, முத்திரைத்தாள் விற்பனையில் முன் அனுபவம், உரிமம் கோரும் பகுதியில் வசித்தல், உடல் தகுதி, செல்வ நிலை சான்று ஆகிய விவரங்களுடன் விண்ணப்பங்கள் இருத்தல் வேண்டும். முத்திரைத்தாள் விற்பனை உரிமம் வழங்க விண்ணப்பங்கள் கோரி ஒவ்வொரு மாவட்ட பதிவாளரும் விளம்பர பலகையில் ஒட்டி விளம்பரப்படுத்த வேண்டும். நேர்முகத்தேர்விற்கு குறைந்தபட்சம் ஒரு வாரம் முன்னதாக அஞ்சல், விண்ணப்பத்தாரர்களை சென்று சேரும் வகையில் அனுப்பி வைக்கப்பட வேண்டும்“ என்று கூறியுள்ளார்.