தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் சென்னை மாவட்ட சிலம்பாட்டக்கழகம் சார்பாக மாநிலத் தலைவர் Dr.M.ராஜேந்திரன் ஐஏஎஸ் அவர்களின் சீரிய தலைமையில் பாரம்பரிய சிலம்பக்கலை விழா ஜனவரி 23, 24 தேதிகளில் சென்னை பேரக்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
விழாவானது சென்னை மாவட்ட சிலம்பாட்டக் கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் V.கிரிநாத் தலைமை வகித்தார். தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் K.G.முரளி கிருஷ்ணா வரவேற்புரை வழங்கினார். சென்னை மாவட்ட சிலம்பாட்டக் கழகத்தின் செயலாளர் J.சீனிவாசன், செயலாளர் S.R.லட்சுமணன், துணைத்தலைவர்கள் P.முத்தமிழ் பாண்டியன், R.கமலகண்ணன், மூத்த ஆசான்கள் B.C.பத்மநாபன், E.கனகசபை, பொருளாளர் E.குப்பன், உதவித் தலைவர் A.சோமசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிலம்பக் கலைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை பாஜக பிரமுகர்கள் ஷெல்வி மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோர் வழங்கினர்.
சிறப்பு விருந்தினர்களாக S.சரவணகுமார் IRS, சமூக ஆர்வலர் சௌந்தர ராஜா, சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை மாவட்ட சிலம்பாட்ட கழகத்தின் சட்ட ஆலோசகர் A.கவிமணி, உதவி தலைவர் T.பாண்டி, B.குகன், லயன் K.சீனிவாசன், திருவள்ளூர் சிலம்பாட்டக் கழகத்தின் செயலாளர் V.ஹரிதாஸ், உதவி செயலாளர் M.தமிழ்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழரின் புராதன வீரக்கலைகளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் நடைபெற்ற இவ்விழாவின் இறுதியில் விழா அமைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் S.சந்தீப்குமார் நன்றியுரை வழங்கினார்.