வாழ்வில் அடுத்தடுத்த அவமானங்கள், ஏளனங்கள் புறக்கணிப்புகள், தொழில் நஷ்டம், மனக்கஷ்டம், இயல்பு வாழ்வில் தோல்வி மேல் தோல்வி வருகின்ற போது தன்மீதும் தன் திறமையின் மீதும் நம்பிக்கையில்லாத மனிதர்கள் சாக நினைக்கிறார்கள்.
ஆனால் அதுவே தன்மீதும் தன் திறமையின் மீதும் அளவற்ற நம்பிக்கை உள்ள மனிதர்கள் தனது கடைசி மூச்சு உள்ளவரை தனது கடைசி இதயதுடிப்பு நிற்கும்வரை இறுதிவரை மனஉறுதியோடு போராடி வாழ்வில் சாதிக்கிறார்கள். சரித்திரம் படைக்கிறார்கள். வரலாற்றில் வாழ்கிறார்கள்.
எனவே,
தோழா தோல்விகள் என்பது
மறைந்து போகும் பனித்துளிதான்.
நீ பயப்படுவது போல
மறைந்து போகாத
பனிப்பாறை அல்ல என்பதை
நீ முதலில் அறிந்து கொள்,
புரிந்து கொள்.. தெரிந்துகொள்..
உன் தளராத தன்னம்பிக்கையால்
உலகை வெல்.