போலீசில் யார் புகார் கொடுத்தாலும், குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பல வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த போதும் முறையாக காவல் துறை பின்பற்றுகிறார்களா?
நீதிமன்ற உத்தரவு பின்வருமாறு:
- புகார் அடிப்படையில் குற்றம் புலனாகும் பட்சத்தில் கண்டிப்பாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆரம்ப கட்ட விசாரணை தேவையில்லை.
- குற்றம் நடந்திருப்பதற்கான முகாந்திரம் இல்லையெனில் விசாரிக்க வேண்டும். சம்பவம் நடந்துள்ளதா? இல்லையா? என கண்டறிய வேண்டும். முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
- புகாரில் உண்மையில்லை என விசாரணையை முடிப்பதாக இருந்தால், மனுதாரருக்கு ஒருவாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும். மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும்.
- முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் வழக்குப் பதிவு செய்வது போலீசாரின் கடமை. கடமை தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முதற்கட்ட விசாரணையில் புகார் உண்மையா? இல்லையா? என பார்க்கக்கூடாது. முகாந்திரம் இருக்கிறதா? என பார்க்க வேண்டும்.
- குடும்பத் தகராறு, வணிக ரீதியான குற்றங்கள், மருத்துவ சிகிச்சையில் கவனக்குறைவு, ஊழல், காலதாமதமாக வரும் புகார்களின் மீது முதற்கட்ட விசாரணை தேவை.
- முதற்கட்ட விசாரணையை ஏழு நாட்களில் முடிக்க வேண்டும். காலதாமதம் ஏற்படின் காவல்நிலைய டைரியில் பதிவு செய்ய வேண்டும். தினசரி வரும் அனைத்து புகார்களையும் டைரியில் பதிவு செய்ய வேண்டும். (கோர்ட் டைரக்ஷன் கேட்டு பல பேர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டதன் பேரில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் அவர்கள் காவல்துறை டி.ஜி.பி. அவர்களுக்கு மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.)