மயிலாடுதுறை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா மயிலாடுதுறை அரசு நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் குழந்தைகளுக்கு இளம்பிள்ளைவாதம் ஏற்படாமல் பாதுகாக்கும் நோக்கில் ஆண்டுதோறும் ஐந்து வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதல்வர் பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா மயிலாடுதுறை அரசு நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டத்தில் 87 ஆயிரத்து 281 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது. போலியோ சொட்டு மருந்து போடும் பணி பணிகள் 582 இடங்களில் நடைபெறுகிறது.
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் பணியினை சுகாதாரத் துறை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 1069 பேர் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணன், அதிமுக மாவட்ட செயலாளர் வி.ஜி.கே. செந்தில்நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சிகளில், மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜசேகர், வட்டார மருத்துவ அலுவலர் சரத்சந்தர், மருத்துவர்கள், ஊழியர்கள், சிசிசி சமுதாயக் கல்லூரி நிறுவனர் காமேஷ் தலைமையிலான நர்சிங் மாணவிகள் கலந்துகொண்டனர்.