பழங்குடி மலைக்குறவர் சமுதாயத்தில் பிறந்த தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி யில் உள்ள பழைய பேராவூரணியில் பிறந்தவர் 2005-&2010 ஆண்டு மதுரையில் அரசு சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வரும் வழக்கறிஞர் உத்தமகுமரன் ஙிகிஙிலி பற்றிய ஓர் பார்வை.
வறுமையும், ஏழ்மையும் மட்டுமே அறிந்த கூடை முடையும் கூலி தொழிலாளி காளிமுத்து – காளியம்மாள் மகன், வறுமையிலும் படிப்பில் ஆர்வம் கொண்ட உத்தமகுமரன் பள்ளி படிப்பை பேராவூரணி அரசு ஆண்கள் பள்ளியில் பயின்றவர், 34 வயதான உத்தமகுமரன், தன்னை போல தன் இனமக்களும், பட்டங்கள் பெறவேண்டும் என்று அயராது பாடுபட்டு வருகிறார். தன் இனமக்களின் வளர்ச்சிக்காக தன்னையும், தன் தொழிலையும் அர்ப்பணித்து கொண்டார்.
கல்வியால் மட்டுமே தன் இனத்தின் மீதுள்ள கரையை அகற்ற முடியும் கல்வியே செல்வம் என்று முழங்கி வருகிறார். இதற்காக அவர் குறிஞ்சி இனமக்கள் எழுச்சி கழகம் என்ற கட்சியை தோற்றுவித்து, மலைக்குறவர்களின் தலைவராகவும், அவர்கள் இதயத்தில் முடி சூடா மன்னனாக செயல்பட்டு வருகிறார். காவல் துறையினர் தன் இனமக்கள் மீது பொய் வழக்கு போட்டு வாழ்வை சீரழித்து வரும், காவல் துறையின் அடக்கு முறைக்கு எதிராகவும், மலைக்குறவர்களுக்கு அடிப்படை உரிமையான கல்வியை பெற சாதிசான்றிதழ்கள் தர மறுக்கும் அரசு அலுவலர்களை வலியுறுத்தியும் வருகிறார்.
குடிமனை இல்லாமல் நாடோடிகளாக ஆக்கப்பட்டுள்ள மலைக்குறவர்களை ஒன்றிணைக்கும் மிக சவாலான வேலையினை கையில் எடுத்து இன்று சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மலைக்குறவர்களை ஒருங்கிணைத்து பயிற்சி வகுப்புகள், அரசியல் வகுப்புகள், நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறார்.
தமிழ்நாட்டில் உள்ள சுமார் 5 லட்சம் மக்களுக்கும் தெரிந்துள்ள உத்தமகுமரனின் குரல் இன்னமும் ஆட்சியாளர்களையும், அரசியல்வாதிகளின் காதுகளில் ஒலிக்கவில்லை என்பது ஒரு வேதனை பதிவு. கரோண ஊரடங்கு சமயத்தில் சட்டம் படித்த வழக்கறிஞர் என்ற கௌரவத்தையும் வீசி எரிந்து, அன்றாடம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தடுமாறிய மலைக்குறவர்களின் வாழ்க்கை நிலையையும், தொழிலையும் உலகறிய கூடை முடையவும் செய்தார்.
பத்தாம் வகுப்பு படித்தாலே, தன் இனத்தை மறக்கும் உறவுகளின் மத்தியில், “இந்த சாதியில் பிறந்தது என் தவறு அல்லவே என்றும், என்னை நானே சமர்ப்பணம் செய்தாவது என் இனத்தை மேம்படுத்துவேன்” என்ற அர்ப்பணிப்பு குணம் கொண்டவர்.
பழங்குடி மலைக்குறவர் மக்களுக்கு பட்டா வழங்க, சான்றிதழ் வழங்கக்கோரி தன் இன மக்களுக்காக போராடி கொண்டிருக்கும் போராளி…
வறுமையிலும், ஏழ்மையிலும் வாழ்ந்தாலும் கூட மக்களுக்காக அவரது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.