தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள துணை வாக்குச்சாவடி மையங்களை, மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளில், துணை வாக்குச்சாவடி மையம் அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசர் மேல் நிலைப்பள்ளி, தென்கீழ் அலங்கம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் மாதாகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட தூய மிக்கேல் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் துணை வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், துணை வாக்குச்சாவடி மையங்களை, தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தா ராவ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, இந்த மையங்களில் போதிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? என்றும், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்வு தளம் முறையாக உள்ளதா? என்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், தஞ்சை வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.