மின் திருட்டை தடுக்கும் நவீன கருவியை, சிவகங்கை அருகே திருமாஞ்சோலை விக்ரம் பொறியியல் கல்லூரி மாணவி கே.மேனகா உருவாக்கி உள்ளார்.
இதுகுறித்து மேனகா கூறியதாவது: சிலர் மின் கட்டணம் செலுத்தும் இறுதி நாளை மறந்துவிடுவதால் அபராதம் செலுத்துகின்றனர். நான் உருவாக்கிய மீட்டர், மூன்று தினங்களுக்கு முன்பே கட்டண விபரத்தை ‘வாய்ஸ் மெசேஜாக’ தெரிவிக்கும். குறுஞ்செய்தியும் அனுப்பும். மேலும் தினமும் பயன்படுத்தும் மின் அளவு, கட்டண விபரத்தையும் அறியலாம்.
மீட்டர், ‘சாப்ட்வேரில்’ இணைக்கப் படுவதால் மின் கட்டணத்தை அலுவலகத்தில் இருந்தபடியே தெரிந்து கொள்ளலாம். மின் அளவீடு எடுக்க ஆள் தேவையில்லை. 100 யூனிட் இலவசம் என்பதால், 75 யூனிட் வரும்போதே தகவல் கொடுக்கும். கட்டணம் செலுத்தாவிட்டால், தானாவே மீட்டர் நின்றுவிடும். கட்டணம் செலுத்தியதும் தானாக இயங்கத் துவங்கும். இதனால் மின் இணைப்பு துண்டிக்க தேவை இருக்காது. மின்னல் தாக்கும்போது மின் பொருட்கள் பாதிக்காமல் இருக்க, தானாகவே மீட்டர் நின்றுவிடும். அந்த பகுதியின் டிரான்ஸ்பார்மரில் மின்திருட்டு நடந்தால், மீட்டரில் சிவப்பு விளக்கு எரியும்.
மின்வாரியத்திற்கும் தகவல் சென்றுவிடும். இந்த மீட்டரை 1,500 ரூபாய்க்கே தயாரிக்கலாம். எனது தந்தை கண்ணன், பொறியாளர் என்பதால் இதனை சாதிக்க முடிந்தது, என்றார்.
மேனகாவுக்கு கேரள இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் டெக்னாஜி, சிறந்த மாணவருக்கான விருதை நான்கு முறை வழங்கியது. அவரை பாராட்ட, 73731 65553.