தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம உதவியாளராக பணிபுரியும் நபர் ஒருவர் நில அளவை பட்டா மாறுதல் மற்றும் சான்றிதழ்கள் சம்பந்தமாக அலுவலகம் வரும் பொதுமக்களிடம் மிகவும் கறாராக பேரம் பேசி லஞ்சம் பெற்று வருவதாக தெரிகிறது.
இவருக்கு இதே பகுதியை சேர்ந்த கல்வி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் ஒரு நபர் பக்க பலமாக இருந்து வருகிறார். இந்த கல்வித்துறை நபர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியில் மாநில பொருப்பில் இருப்பதாக கூறிக்கொண்டு அரசு அலுவலர்கள் மற்றும் தனி நபர்களை மிரட்டி வருகிறார்.
இந்த கிராம உதவியாளர் விஏஓ மற்றும் நில அளவையர் இவர்களுக்கு கொடுக்க வேண்டும் என கூறி தான் பணம் பெறுவதாக தெரிகிறது. இவர்கள் இருவரும் சேர்ந்து தனியாக ஒரு கிராம நிர்வாகம் செய்து வருகிறார்கள். இது மேற்கண்ட அலுவலர்களுக்கு தெரியுமா? கல்வித்துறை நபர் கட்சியின் பெயரை கூறி கட்டப்பஞ்சாயத்து செய்து வருவது கட்சி தலைமைக்கு தெரியுமா? விசாரித்து வருகிறோம்..
விரிவான செய்திகள் அடுத்த இதழில்…