துரைப்பாக்கம் பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஷெரிப் சௌத்ரி மற்றும் 2 நபர்களை கைது செய்து 140 கிலோ கஞ்சா மற்றும் 3 செல்போன்களை கைப்பற்றிய தி.நகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார் .
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST DRUGS” – ன் தொடர்ச்சியாக, தி.நகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW) காவல் ஆய்வாளர் திரு.கண்ணன் தலைமையிலான காவல் குழுவினர் மற்றும் J-9 துரைப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த தகவலின்பேரில், 30.03.2021 அன்று காலை துரைப்பாக்கம், கல்லுக்குட்டை, டாக்டர் அம்பேத்கர் நகர், தெருவில் கண்காணித்த போது, அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ஷெரிப் சௌத்ரி, முகமது மாமனுல் இஸ்லாம், சாஹின் மியா, ஆகிய 3 நபர்களை கைது செய்தனர்.
மேலும், அவர்கள் வீட்டில் மறைத்து வைத்திருந்த 140 கிலோ கஞ்சா மற்றும் 3 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு,அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் 03.04.2021 அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.