புதுக்கோட்டை மாவட்டத்தின் 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், அனைத்து தொகுதிகளுக்கும் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணப்பட உள்ளது. இந்த மையத்திற்கு இரவு 9 மணி முதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன.
இந்த மையத்தை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான உமாமகேஷ்வரி ஆய்வு செய்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது,
”3 அடுக்கு பாதுகாப்போடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. 140 ஆயுதம் தாங்கியோர் பாதுகாப்பு, சிசிடிவி பாதுகாப்பு, டிவி ஆகியவை உள்ளன. எந்த சலசலப்பும் இல்லாமல் தேர்தலை நடத்திய அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோருக்குப் பாராட்டுகள்” என்றார்.