பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு தேவையானதாக உடனடியான மக்கள் நலப்பணி கோரிக்கைகளாக தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் அரங்க.குணசேகரன் நுண்ணறிவு இதழுக்கு அளித்த செய்தியில்,
“தென்னையை மூலப்பொருளாக கொண்ட கூட்டுறவு பொதுத் தொழில் உற்பத்தி ஆலைகளை அமைப்பதன் மூலம் பலநூறு ஊரகப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு அழிக்கமுடியும்! முன்னரே பேராவூரணி சேதுபாவாசத்திரம் பகுதிகளில் தென்னை நார் கயிறு தொழிலகங்களை தனியார் சிலர் திறம்பட நடத்தி வருகின்றனர்.
தென்னையின் துணைப் பொருளே கயிறு தொழிற்சாலை.மூலப்பொருளான தேங்காய் தமிழ்நாட்டிலேயே கூடுதல் திறனும் சத்தும் கொண்ட தேங்காய் பருப்பு என்ற பெருமை பேராவூரணி தொகுதியில் விளையும் தேங்காய்க்கு உண்டு.
இத்தகைய தேங்காய்கள் இலட்சக்கணக்கில் வெளியூர் சந்தைகளுக்கே கொண்டு செல்லப்படுகிறது.
இவைகளை தமிழக அரசே, குருங்குளம் கூட்டுறவு சர்க்கரை ஆலைபோல ஒரு பொதுத்துறை கூட்டுறவு தேங்காய் எண்ணெய் தயாரிப்பு ஆலையையும் தேங்காய் பவுடர் தயாரிப்பு ஆலையையும் நிறுவிட வேண்டும்!
தமிழக அரசு +தென்னை விவசாயிகள்+ விவசாயக் கூலித் தொழிலாளர்களைக் கொண்ட முத்தரப்பு பங்குதாரர்களைக் கொண்டு இந்த ஆலைகளை அமைக்கலாம். இதனால் விவசாயிகள், படித்த இளைஞர்கள் விவசாயத் தொழிலாளர்களுக்கு போதுமான வேலை வாய்ப்பும் வருமானமும் கிடைக்கும். பேராவூரணியில் புதிதாக வரும் சட்டமன்ற உறுப்பிணர் உரிய கவனம் செலுத்தி அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.