போடிநாயக்கனூர் பேருந்து நிலையத்தில் அதிவேகமாக அஜாக்கிரதையாகவும் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற ஹரி வேல் முருகன் பேருந்து.
இந்த விபத்தில் குப்பி நாயக்கன்பட்டி சேர்ந்த மாரிமுத்து என்பவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனதாகவும் மேற்படி விபத்து சம்பந்தமாக போடி நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட அரை மணி நேரத்தில் விபத்தை ஏற்படுத்தி சென்ற ஹரி வேல்முருகன் தனியார் பேருந்து மற்றும் ஓட்டுனர் கணேசன் ஆகியோரை கைது செய்து விபத்தில் இறந்த கூலித்தொழிலாளி மாரிமுத்துவை போடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மற்றும் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு ஆகியவற்றை உடனடியாகவும் செய்து தந்தனர் என்றும் இந்த தேர்தல் நேரத்தில் நெருக்கடியான சூழ்நிலையில் போடி காவல்துறையினர் மனிதாபிமான அடிப்படையில் இந்த விபத்து வழக்கினை கையாண்ட விதம் பொதுமக்களும் மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரும் சமூக ஆர்வலர்களும் காவல்துறையினரை மிகவும் பாராட்டுகின்றனர்.
இந்த விபத்து சம்பந்தமாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி போடி உட்கோட்ட துணைகாவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் போடிநகர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கதிரேசன் மற்றும் எஸ்எஸ்ஐ செல்வக்குமார் குமரேசன் மற்றும் காவலர்கள் அனைவரின் பணியினை போடி பொதுமக்கள் பாராட்டுகின்றனர்…