வேளச்சேரி ஏரியாவில் சமீபகாலமாக தெருநாய்கள் அதிகரித்து வருகின்றது. இதில் முக்கியமாக, விஜயா நகர் பேருந்து நிலையம், மடிப்பாக்கம் செல்லும் வழியில், ராம்நகர், தேவி கருமாரியம்மன் நகர், வேங்கடேஸ்வரா நகர், எம்ஜிஆர் நகர், 100 அடி ரோடு இந்த பகுதிகளில் அதிகமாக தெருநாய்கள் குவிந்து கிடக்கின்றன. ஒரு நாளைக்கு குறைந்தது 5, 6 நபர்களை பாதிப்பு அடைகின்றனர். டூவிலரில் போகும் நபர்களை துரத்திதுரத்தி கீழே விழுகின்ற அவல நிலையும் தினந்தோறும் அரங்கேறி வருகிறது. இதனால் அந்த ஏரியா பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கண்டுகொள்ளுமா சென்னை மாநகராட்சி.
இப்படிக்கு
வெங்கடேஸ்வரா நகர் பொதுமக்கள்..