ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியில் வரமுடியாத மூத்த வயதினருக்கு (Senior Citizen) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அ.கயல்விழி IPS அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்ட காவல்துறை சார்பில் கிடாரங்கொண்டான், ஆண்டிபந்தல், எழிலூர் பகுதிகளில் மருத்துவ பொருட்கள் மற்றும் உணவு ஆகியவை வழங்கப்பட்டது.
மனிதநேயத்துடன் செயல்பட்ட திருவாரூர் தாலுக்கா, நன்னிலம், திருத்துறைப்பூண்டி ஆகிய காவல்நிலைய காவல் ஆய்வாளர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.