தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு காவல்துறையினர் பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தென் மண்டல காவல்துறை தலைவர் உயர்திரு தா.ச. அன்பு IPS அவர்கள் மற்றும் மாவட்ட SP திரு. இராசராசன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் தேவகோட்டை நல்லாபுரம் மற்றும் சமத்துவபுரம் பகுதியில் வசித்து வரும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 75 ஏழை, எளிய குடும்பங்களுக்கு சமூக ஆர்வலர்கள் உடன் இணைந்து தேவகோட்டை உட்கோட்ட (பொறுப்பு) காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.நாகராஜன் அவர்கள் 10 கிலோ அரிசி பைகளை இலவசமாக வழங்கினார். தேவகோட்டை தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.சுப்பிரமணியன் அவர்கள் உடன் இருந்தார்.