தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் ஞானஒளி சமூக அறக்கட்டளை இணைந்து தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க உறுப்பினர்களுக்கு கொரோனா கால நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு 3.06.2021 வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு விருகம்பாக்கத்தில் உள்ள சங்க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது..
மூத்த பத்திரிகையாளர் முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு ஞானஒளி சமூக உதவி அறக்கட்டளை நிறுவனர் ஞானமானிக்கம் அவர்கள் நிவாரண பொருட்களை வழங்கினார்.
அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் கபசுர குடிநீர் மூலிகைப்பொடி, கிருமிநாசினி, முககவசம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 100 பத்திரிகையாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் தலைவர் நமது நகரம் ஆசிரியர் சரவணன், பொதுச் செயலாளர் பீப்பிள் டுடே ஆசிரியர் சத்யநாரயாணன், ஒருங்கிணைப்பாளர் பேனா முள் ஆசிரியர் பாடி.கார்த்திக், துணைத் தலைவர்கள் சட்ட கேடயம் ஆசிரியர் ராஜன், மக்கள் விருப்பம் ஆசிரியர் தருமராஜா, இணை செயலாளர் நீதியின் தீர்ப்பு ஆசிரியர் கிருஷ்ணவேணி, அமைப்பு செயலாளர்கள் தர்ம ராஜ்ஜியம் ஆசிரியர் வினோத், திங்கள் மலர் ஆசிரியர் சசிக்குமார், செய்தி தொடர்பாளர் விழுதுகள் ஆசிரியர் விஜயகுமார், தலைமை நிலைய செயலாளர் மண்ணின் குரல் ஆசிரியர் சரவணன் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பல்லவன் முரசு ஆசிரியர் மஞ்சுநாதன் தேனை பார்வை ஆசிரியர் சரண், திரை தீபம் ஆசிரியர் மதி ஒளி ராஜா, அதிரடி தீர்ப்பு ஆசிரியர் சீனிவாசன், டெய்லி நியூஸ் ஆசிரியர் பாலாஜி, திராவிட உதயம் ஆசிரியர் செந்தமிழ் செல்வி, இரத்த சரித்திரம் ஆசிரியர் பாஸ்கரன், சமூக ஆர்வலர் காசிமாயன், வெற்றி யுகம் ராஜேஷ், சிவகுமார், நுண்ணறிவு சாம்சங், கணேச பாண்டி, பேனா முள் சரவணன், கதிர், பேனா முள் ஜெகதீஷ், தர்ம ராஜ்ஜியம் ஸ்ரீராம், மக்கள் விருப்பம் கண்ணன், நீதியின் தீர்ப்பு ருக்மணி, அபிராமி, புஷ்பலதா, அரசு செய்தி கோவிந்தராஜன், பீப்பிள் டுடே ஜெகன், வெங்கடேஷ், புதிய முரசு மணிமாறன், ராஜா, தவமணி, சரவணகுமார், உள்ளாட்சி முரசு ஜீவா, பிரகாஷ்ராஜ், பேஸ் நியூஸ் இதயத்துல்லா நமது விஜிலன்ஸ் வினோத் பல்லவன் முரசு மகேஷ் நாகராஜன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.