திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக திண்டுக்கல் சரக காவல் துணை தலைவர் திரு.எம்.எஸ்.முத்துசாமி அவர்கள், முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளிபிரியா அவர்கள், தற்போது கொரோனா பெருந்தொற்று தீவிரமாகபரவிவருகிறது. அதனைகட்டுப்படுத்தவும்,ஒழித்துவிடவும் ஊரடங்கு அமலில் நிலையில் முன் களப்பணியாளர்களாக செயல்படும் ஊடகத்துறையினருக்கு பாதுகாப்பு கருதி கொரனா தொற்று தாக்காமல் பாதுகாக்க சானிடைசர், ஹேண்ட்வாஷ், முககவசம்,கண் கண்ணாடி அடங்கிய உபகரணங்கள் கூடிய தொகுப்பு பைகளை (Safety Kit) மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழங்கினார்.
நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக டிஐஜி எம்.எஸ். முத்துசாமி அவர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினர் இந்த கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும், மக்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார், மேலும் தங்களது பணி போற்றத்தக்கது எனவும் பாராட்டினார்! முதல் கட்டமாக நகர்புற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் மற்ற பகுதிகளில் உள்ள பத்திரிகையாளர்களுக்கும் அடுத்தடுத்து வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இறுதியில் பத்திரிகையாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி இனிகோ திவ்யன், புறநகர் டி.எஸ்.பி சுகுமார் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.