தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட தினசரி மீன், கோழி விற்பனை சந்தை உள்ளது. பிராய்லர் கோழிக் கடைகள் சுமார் 6 கடைகளுக்கு மேல் உள்ளது. இந்த கடைகளில் வெட்டப்படும் கோழி கழிவுகளால் அருகில் உள்ள சத்திரக்குளம் உள்ளுக்குள் கொட்டுகின்றார்கள்.
வெயில் காலங்களில் குறைந்த வாடை அடித்துக் கொண்டிருந்தது. மழைக்காலம் தொடங்கியவுடன் அந்த பகுதி மிகவும் மோசமாக நாற்றம் அடிக்க ஆரம்பித்து விட்டது. அந்தப் பகுதியில் கடை நடத்துபவர்கள், குடியிருப்பவர்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் தீர்வு கிடைக்கவில்லை. கடைக்காரர்களிடம் சொல்லி எந்தப் பயனும் இல்லை. அதே கரையில் தான் தாய், சேய் நல விடுதி உள்ளது. அவர்களால் எதுவும் சொல்ல முடியாமல் மனம் நொந்து மன உளைச்சளில் உள்ளார்கள். தாய், சேய் நல விடுதிக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் இதை சுவாசித்தால் கொடிய நோய்கள் உருவாகும். அருகில் உள்ள வீடுகள் அதிகம் குளத்து புறம்போக்கிலும், PWD இடத்திலும் இருப்பதல், அவர்கள் புகார் கொடுக்காமல் மௌனம் சாதித்து, நாற்றத்தை தாங்கி கொள்கிறார்கள்.
எனவே சம்மந்த பட்ட சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடியிருப்பு வாசிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.