பிசினஸ் செய்ய முடிவெடுத்தும், அடுத்து எழும் கேள்வி என்ன பிசினஸ் என்பது தான். எல்லா பிசினஸையும் எல்லொரும் செய்து விட முடியாது.நமக்கான பிசினஸ் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு நம்மை நாம் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நம் பலம் என்ன, பலவீனம் என்ன? நம்மிடம் உள்ள திறமை என்ன? நாம் என்ன படித்திருக்கிறோம்? நம்முடைய ஆர்வம் எதில் இருக்கிறது? இவற்றையெல்லாம் நாம் தெரிந்து கொண்டால் போதும் நம்முடைய பிசினஸ் பாதையை நம்மால் கண்டடைந்து விட முடியும்.
பிசினஸ் செய்ய விரும்பும் நீங்கள் எந்தத் துறையில் பிசினஸ் செய்ய விரும்புகிறீர்களோ, அதுசார்ந்த அறிவும், அனுபவமும், அவசியம் தேவை. அப்போதுதான் அவற்றை திட்டமிட்டு செய்லபடுத்த முடியும். முன்பின் அனுபவமில்லாத துறையாக இருந்தால் அதற்கு தேவையான அடிப்படைகளைக் கற்றுக் கொண்ட பிறகே அந்த பிசினஸில் ஈடுபட வேண்டும்.
பொதுவாக பிசினஸ் உற்பத்தியாளர், விற்பனையாளர், வாடிக்கையாளர் ஆகியவர்களையும், மூலதனம், பொருள், தொழில்நுட்பம், மனிதவளம் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கும். இவற்றில் எதை வேண்டுமானாலும் ஒருவர் தனது பிசினஸாக தேர்ந்தெடுக்கலாம். ஆனால் அதற்கு உங்களது துறைகள் சார்ந்த திறமைகள் எப்படி இருக்கிறது? எந்தத்துறையை நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள்? என்பதை நீங்கள் முடிவு செய்தாக வேண்டும்.
- உங்களிடம் ஒரு பொருளைத் தயாரிப்பதில் தொழில்நுட்ப அனுபவமும், அந்தப் பொருளை மேலும் சிறப்பாக தயாரிக்க புதிய யோசனைகளும் உள்ளனவா?
- ஒரு பொருளை விற்பதில் நீங்கள் சிறப்பாக செயல்படுவரா? உங்களுடைய பொருட்களுக்கான வாடிக்கையாளரை சரியாகக் கண்டுப்பிடித்து விற்க கூடியவரா?
- மனிதர்களைக் கையாளவதும், அவர்களிடம் இருந்து வேலை வாங்குவதும் உங்களுக்கு கைவந்த கலையா?
- கணினி, இணையம், ஆப்ஸ் போன்ற தொழில் நுட்பங்களில் புகுந்து விளையாடும் அபாரமான திறமை உங்களுக்கு உண்டா?
முதல் திறமை உங்களுக்கு இருந்தால் உற்பத்திதுறையில் தாராளமாக நீங்கள் பிசினஸை தொடங்கலாம். ஆனால் அடுத்த மூன்று திறமைகளையும் கொண்டவர்களை நிச்சயம் உடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டாவது திறமை உங்களுக்கு இருந்தால், தாராளமாக உற்பத்தியாளரிடம் பொருளை வாங்கி விற்கும், வர்த்தக பிசினஸில் ஈடுபடலாம். ஆனால் உடன் மூன்றாவது, நான்காவது திறமைகளைக் கொண்டார்கள் உடன் வைத்துக் கொள்வது பிசினஸ் வளர்ச்சிக்கு உதவும். உடன் வைத்துக் கொள்ளாவிட்டாலும் அவர்களுடைய சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மூன்றாவது திறமையைக் கொண்டவராக இருந்தால் உங்களால் சேவைத்துறையில் பிசினஸ் செய்ய முடியும். உங்களுடைய திறமையை வைத்து மற்றவர்களிடம் பணிபுரிவதைக் காட்டிலும் அதையே பிசினஸாக செய்யலாம். தனியாக ஏஜென்ஸி அமைத்து நிறுவனங்களுக்கு சேவையாக வழங்கலாம்.
நான்காவது பதில் உங்களுடையதாக இருந்தால், மற்ற திறமைகள் உள்ள அனைவருக்கும் நீங்கள் நிச்சயம் தேவைப்படுவீர்கள். சரியான பிசினஸ் மாடலுடன் களமிறங்கினால் நிச்சயம் உங்களுக்கான சந்தையப் பிடித்துவிடலாம்.
உங்களுக்கான துறையை நீங்கள் தேர்ந்தெடுத்துவிட்டீற்களா? சபாஷ். பிசினஸைத் தொடங்குவதற்கான நடைமுறைகளை தெரிந்துக் கொள்ளலாம். அதற்கு முன் வெற்றிகரமான பிசினஸுக்கு கூடுதலாக சில விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
Risk Management
பிசினஸ் என்பது எப்போதும் ரிஸ்க்குகள் நிறைந்தது என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ரிஸ்க் எடுக்க தயங்குபவராக இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் எடுக்கும் ரிஸ்க் என்பது உங்களுக்கு தரும் லாபத்தையும், அதே சமயம் நஷ்டத்தையும் பொறுத்தே முடிவு செய்யப்பட வேண்டும். நாம் எடுக்கும் ரிஸ்க் எந்தளவுக்கு வொர்த் (கீஷீக்ஷீtலீ) என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். ரிஸ்க் எடுக்கும் போது அதன் பின் விளைவுகள் பற்றி நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.
Time Management
சிறுசிறு வாய்ப்புகளையும் தவற விடக்கூடாது. இரவு 1.30 மணிக்கு அமெரிக்காவில் உள்ள ஒரு வாடிக்கையாளரிடம் பிசினஸ் குறித்து பேச வேண்டியிருக்கிறது என்றாலும் அதனைத் தவற விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பரபரப்பான வாழ்க்கை இது. சோர்வு எப்போதும் இருக்கத்தான் செய்யும். கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறவிட்டு விடாதீர்கள். ஒரு ஆர்டர் தானே என்று அலட்சியம் காட்டாதீர்கள். ஏனெனில் பெரும்பாலான தொழில்கள். மக்களின் பரிந்துரைப்பின் பேரில்தான் (Word of Mouth) வெற்றியடையும். எனவே நீங்கள் தவறவிடும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்க வேண்டிய பல வாய்ப்புகளை முடக்கிவிடும்.
Life Management
எல்லாவற்றுக்கும் மேல் பிசினஸ் செய்பவர்களுக்கு குடும்ப சூழ்நிலை என்பது பெரிதடையாக இருக்கும். பிசினஸ் செய்ய குடும்பத்தினரின் ஆதரவும், ஒத்துழைப்பும் அவசியம் தேவை. அந்த ஆதரவு பணத்தைத் தாண்டிய உளவியல் ரீதியான ஆதரவு ஆகும். அது கிடைக்காமல் தான் பிசினஸ் செய்ய விரும்பும் பலர் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
குடும்பத்தினரிடம் பேசி புரிய வைத்து அவர்களின் ஆதரவைப் பெற வேண்டும். நண்பர்களை எப்போது உறுதுணையாக்கிக் கொள்ள வேண்டும். அவர்களை மூலம் உங்களது பிசினஸை வளர்ப்பதற்கான உதவிகளைக் கேட்டு பெறலாம்.