புதுக்கோட்டை ஏ.டி.ஆர்.மெட்ரிக் பள்ளியில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி த.விஜயலட்சுமி அவர்கள் பார்வையிட்டு இலவச கட்டாயக்கல்வி (RTE) விளம்பர பதாகை பள்ளிக்கு முன்பு வைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியும், ஆசிரியர்கள் வருகை, பள்ளிவளாகம், கழிவறைத்தூய்மை, RTE யின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு இணையதளத்தில் பதிவு செய்து வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் குறித்து ஆய்வு செய்தார். பள்ளியின் முதல்வர் V.ராமச்சந்திரன் மற்றும் தமிழ் ஆசிரியை அஞ்சலிதேவி ஆகியோர் உடனிருந்தனர்.