தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திரு.யி.ரி.திரிபாதி, இ.கா.ப அவர்கள் 30.6.2021 அன்று பணி ஓய்வு பெறுவதையொட்டி, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் கலந்து கொண்டு, காவல் துறை சார்பில் அளிக்கப்பட்ட சிறப்பு கவாத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். காவல் துறை கூடுதல் இயக்குநர் (நிர்வாகம்) திரு.வி.ரவி, இ.கா.ப அவர்கள் பணி ஓய்வு பெற்ற காவல் துறை தலைமை இயக்குநர் திரு.I.K.திரிபாதி, இ.கா.ப அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காவல் துறை தலைமை இயக்குநர் திரு.சி.சைலேந்திரபாபு, இ.கா.ப, காவல் துறை இயக்குநர்கள் திரு.கரண்சின்கா, இ.கா.ப, (Fire & Rescue)
திரு.ஷகில் அக்தர், இ.கா.ப, (CBCID), திரு.P.கந்தசாமி, இ.கா.ப, (V&AC) திரு.சுனில்குமார் சிங், இ.கா.ப, (Prison) திரு.B.K.ரவி, இ.கா.ப (EB Vigilance), சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப, உயர் காவல் அதிகாரிகள் மற்றும் பணி ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.