தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் 23.07.2021 வெள்ளிக்கிழமை அன்று சென்னை தாம்பரம், அய்யா சாமி தெரு, எண். 8E/96 என்ற முகவரியில் நடந்தது.
தலைவர் எஸ்.சரவணன் அவர்கள் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் G.சத்யநாராயணன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
சங்கத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது.
பொருளாளர் M.காமேஷ் கண்ணன் அவர்களால் 2020 -2021ம் ஆண்டுக்கான வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது.
பத்திரிகையாளர்களின் தற்போதைய அவசியம் குறித்து ஆலோசித்து பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். மதிய உணவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.