தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் & பேனா முள் பத்திரிகை இணைந்து டாக்டர் ஏ.ஜே.பி.அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு 27.07.2021 அன்று குன்றத்தூர்&நந்தம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவிழாவில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது. அதனை தொடர்ந்து அரிசி பருப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கபசுர குடிநிர் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது.
மக்கள் சேவகன் அரி கிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் M.P.சுருளிராஜன், அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் திரு புண்ணியகோட்டி சமூக ஆர்வலர் காசிமாயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டனர்.
நமது நகரம் ஆசிரியர் எஸ்.சரவணன், வெற்றியுகம் ஆசிரியர் காமேஷ் கண்ணன், பேனாமுள் ஆசிரியர் பாடி.பா.கார்த்திக், சட்ட கேடயம் ஆசிரியர் ராஜன், நீதியின் நுண்ணறிவு ஆசிரியர் சிவகுமார், நீதியின் தீர்ப்பு ஆசிரியர் கிருஷ்ணவேணி, விழுதுகள் ஆசிரியர் விஜயகுமார், ராஜ கர்ஜனை ஆசிரியர் இளஞ்செழியன், மக்கள் ராஜ பார்வை ஆசிரியர் ஹரி கிருஷ்ணன், தேனை பார்வை சரண், திரவிட உதயம் ஆசிரியர் செந்தமிழ் செல்வி, அதிரடி தீர்ப்பு இணையாசிரியர் கலைமணி, உள்ளாட்சி முரசு வெங்கடேசன், கிரைம் ஸ்பாட் சத்யா, டார்ஜன், பேனா முள் மோகன், அஸ்லாம், வெற்றி யுகம் ராஜேஷ் உள்ளிட்ட பத்திரிகை நண்பர்கள், தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டு டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்களின் நினைவை போற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியை பேனா முள் ஆசிரியர் பாடி.பா.கார்த்திக், பேனா முள் நிருபர் ஞானராஜ் மற்றும் பேனா முள் பத்திரிகை குழு சிறப்பான முறையில் விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.