தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பட்டுக்கோட்டை கூட்டுறவு துறையில் மேலாளராக பணிபுரியும் M.சிவசங்கர் கடந்த 1995ம் ஆண்டு சேல்ஸ்மேனாக பணியில் சேர்ந்தார். படிப்படியாக பதவி உயர்வு பெற்று தற்போது மேலாளராக இருக்கிறார். இவருக்கு கீழ் சேல்ஸ்மேனாக 29 பேர் பணியில் இருக்கிறார்கள்.
பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் ஆகிய ஊர்களில் பணியாற்றி வருகிறார்கள். தமிழக அரசு சட்டத்தின்படி 3 ஆண்டுக்கு ஒரு முறைதான் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவு இருந்தும், மேலாளர் சிவசங்கர் அவர்கள் 6 மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் கையூட்டு பெற்றுக்கொண்டு யார் யாருக்கு எந்தெந்த கடைகளில் பணி வேண்டும் என்று கேட்கிறார்.
தனக்கு வேண்டியவர்களை பணிஅமர்த்தி 29 பேரையும் மாறுதல் செய்துள்ளார். இதுதொடர்பாக மேலாண்மை இயக்குநர் மாரிமுத்து அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்ட போது அவர் போனை எடுக்கவில்லை. இதை கண்டித்து அனைத்து சேல்ஸ்மேனும், அதே இடத்தில் பணிஅமர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அவர்கள் இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பாரா..?