அனைத்து மாவட்ட ஊர்காவல் படை காவலர்கள் முதல்வரிடம் வைத்துள்ள கோரிக்கை விவரம் பின்வருமாறு:
தமிழ்நாடு ஊர்காவல் படையில் 16,000ம் காவலர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், அரசு உயர் அதிகாரிகளுக்கும், ஊர் காவல் படை காவலர்களின் குடும்பத்தார்கள் மற்றும் ஊர் காவலர்கள் ஆகிய எங்களின் கண்ணீராலும், சிரம் தாழ்ந்த கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழ்நாடு காவல்துறையில் கீழ், கடமை, கண்ணியம், கட்டுபாட்டுடன் பணியாற்றி வரும் தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களாகிய 16,000 படை வீரர், வீரங்கனைகள் காவல் பணியினை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றோம்.
அதிலும் நாங்கள் பார்க்கும் முக்கியமான பணி கீழ் வருமாறு.
போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணி.
தபால் மற்றும் தகவல் பரிமாற்ற பணி.
காவல் நிலையத்தில் கணினி இயக்குதல், எழுத்தர் பணி.
இரவு ரோந்துப் பணி.
காவல் அதிகாரிகளுக்கு வாகனங்கள் இயக்கும் பணி.
அனைத்து மதத்தினர்களின் திருவிழாக்களில் பாதுகாப்பு வழங்கும் பணி.
முக்கிய தலைவர்களின் சிலைக்கு பாதுகாப்பு பணி.
அரசியல் தலைவர்கள் வருகையின் போது பாதுகாப்பு பணி.
அரசு அதிகாரிகள் வருகையின் போது பாதுகாப்பு பணி.
காவலர்களுடன் இணைந்து குற்றங்களை தடுத்தல்.
காவலர்களுடன் இணைந்து குற்றவாளிகளை பிடித்தல் பணி.
இயற்கையால் ஏற்படும் பேரிடர் காலங்களில் மீட்புப் பணி மேற் கொள்ளல்.
தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தல் பாதுகாப்பு பணி.
தற்போது உலகையை உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா எனும் வைரஸ் தொற்றால் பொதுமக்களுக்கு ஏற்படும் தொற்றை குறைக்க அரசு 144 என்ற தடை உத்தரவை மீறாமல் அவர்களின் நலனை காத்திட காவல் துறையோடு இணைந்து தன் உயிரையும் துச்சமென கருதியும் தன் மாநிலத்தில் நிலமையை சரி செய்ய இரவு, பகல் என பாராமல் ஊர் காவல் படை காவலர்கள் தனது பணியை திறம்பட பார்த்து வருகின்றோம். அதினும் சக ஊர் காவலர்களின் இறப்பும் ஏற்பட்டுள்ளது.
எங்களின் கோரிக்கைகளை
தங்களின் பார்வைக்கு
ஊர்காவல் படை காவலர்களின் சுயமரியாதையை நிலை நிறுத்தி நாட்டிற்கு சேவை செய்திட எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான பணி நிரந்தரம் என்ற ஒற்றை மந்திரம் மட்டும்.
ஊர் காவலர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரம் மரணத்தின் விளிம்பில் உள்ளது. பணிக்கேத்த ஊதியம் இல்லாததால் காவலர்கள் தன் உயிரையும் மாய்த்துக் கொண்டுள்ளனர்.
ஊர்காவலர்களின் பணியும் ஊதியமும் நிலையானதாக இருந்தால் குடும்பத்தின் வறுமையைப் போக்கியும் எங்களின் காவல் பணியினை திறம்பட செய்திட ஒரு தீர்வாக அமையும்.
மேலும் எங்களுக்கு மாதத்தின் அனைத்து நாட்களும் பணி நாளாகவும் ஒரு நாள் கவாத்து பயிற்சி நாளாகவும் சம்பளமாக 17,000 அல்லது 20,000 ரூபாய் சம்பளம் வழங்கினால் எங்களின் குடும்பத்தின் தரம் உயர இது ஏதுவாக அமையும்.
இது மட்டுமல்லாமல் ஆண்டுக்கு ஒரு முறை இரண்டு செட் சீறுடைகள் மற்றும் 1.000 ரூபாய் உயர்த்தியும் வழங்கிட வேண்டியும் கேட்டுக் கொள்கின்றோம்.
ஊர்காவல் படை காவலர்களை பணியமர்த்தி காவல் நிலையங்களில் பணி மேற்கொள்ள செய்யும் பட்சத்தில் காவலர்களின் மற்றும் காவல் நிலையத்தின் பணிசுமைகள் குறையும்.
மாண்புமிகு தமிழக முதல்வராகிய தாங்கள் தேர்தல் அறிக்கையாகவும், வாக்குறுதியாகவும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்ற அடிப்படையுடன் நோக்கத்தின் கீழ் ஊர்காவல் படை காவலர்களாகிய நாங்கள் எங்களின் கோரிக்கையாக இந்த அடிப்படையின் கீழ் ஊர்காவல் படை காவலர்களை பணி நிரந்தரம் செய்து பணியமர்த்தப்பட்டால் எங்கள் வாழ்வாதராம் மேன்மையடைய உங்களின் பார்வைக்கு கொண்ட் வந்துள்ளோம்.
மேலும் கருணையின் அடிப்படையில் ஊர் காவல் படை காவலர்கள் எங்களுக்கு நல்லது செய்வீர்கள் என்ற எதிர்பார்த்து கண்ணீருடன் நிர்கதியாய் காத்து நிற்கும் நிலையில் நாங்கள்.
ஒரு உத்தரவுக்காக காத்து நிற்கும் ஊர்காவல் படை காவலர்கள்