சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் பணியின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு காவல் உதவி ஆணையாளர், ஒரு காவல் ஆய்வாளர் உட்பட 19 காவல் ஆளிநர்களின் திருவுருவ படங்களுக்கு, மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தி, இறந்த காவலர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
கடந்த மே, ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் கொரோனா தொற்று பரவல் காலத்தில் அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றிய சென்னை பெருநகர காவல் ஆளிநர்களில் 1.திரு.ஜெ.ஈஸ்வரன், பல்லாவரம் சரக உதவி ஆணையாளர், 2.திரு.சி.ஜெயகுமார், மணலி போக்குவரத்து காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் 3.ஜான் ரூபஸ்,(S-11 தாம்பரம் போக்குவரத்து கா.நி.), 4.திரு.ரவிச்சந்திரன் (நவீன கட்டுப்பாட்டறை), 5.திரு.பத்மநாபன் (T-3 கொரட்டூர் கா.நி.), 6.திரு.அமல்ராஜ் (C-2 யானைகவுனி போ.பு.பி), 7.திரு.செல்வம் (ஆயுதப்படை), சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 8.திரு.அமல்தாஸ், (T-15 SRMC கா.நி.,), 9.திரு.குபேரன் (SCP), 10.திரு.ரவி (R-9 வளசரவாக்கம் கா.நி.), 11.திரு.இளங்கோவன் (G-1 வேப்பேரி போ.கா.நி.), 12திரு.செல்வகுமார் (போக்குவரத்து திட்டமிடல்), தலைமைக் காவலர்கள் 13.தேவன் (நுண்ணறிவுப்பிரிவு), 14.திரு.கோபிநாத் (நசரத்பேட்டை கா.நி.), 15.திரு.சதிஷ்பாபு (ஆயுதப்படை), 16.திரு.மோகன் (SCP), 17.திரு.கார்த்திக்கேயன் (போக்குவரத்து கட்டுப்பாட்டறை), முதல்நிலைக் காவலர் 18.திரு.பாலசுப்ரமணியன் (V-1 வில்லிவாக்கம் கா.நி.,) காவலர் 19.திரு.விக்டர் பென்னட் (ஆயுதப்படை) ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் தன்னுயிர் அர்ப்பணித்தனர்.
காவல் பணியின்போது, கொரோனா தொற்றால் பாதிப்படைந்து இறந்த சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த 19 காவல் ஆளிநர்களுக்கு (31.07.2021) மதியம், எழும்பூர், இராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் அர்ப்பணிப்புடன் முன்களப்பணியாற்றி கொரோனா தொற்றால் மறைந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் திருவுருவ படங்களுக்கு மலர்வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் காவல் ஆணையாளர், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அனைவரும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த மறைந்த காவல் ஆளிநர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்வில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் முனைவர் ஜெ.லோகநாதன், இ.கா.ப., (தலைமையிடம்), மருத்துவர் என்.கண்ணன், இ.கா.ப., (தெற்கு), திரு.செந்தில்குமார், இ.கா.ப., (வடக்கு), திரு.பிரதீப்குமார், இ.கா.ப., (போக்குவரத்து), திருமதி.பி.சி.தேன்மொழி, இ.கா.ப., (சிசிஙி), இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், காவல் ஆளிநர்கள் மற்றும் காவல் குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.