காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கையெழுத்து இயக்க விழிப்புணர்வு பலகையில் கையெழுத்து இட்டு, விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை மக்கள் அறியும்படி ஆட்சியர் ஒட்டினார். பின்னர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.