தோழர் அம்பேத்கர்தாசன் (என்கிற)
R.N.கோவிந்தராசன், M.A., L.L.B. B.Sc.,
இந்தியன் வங்கி காசாளர் (பணி ஓய்வு)
தொடர்புக்கு: 9345086923
1) ஒருவர் ஒரு குற்றம் செய்துள்ளார், அவரை விசாரணை செய்து தண்டனை கொடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர் ஒரு நீதிமன்றத்தில் ஒரு வழக்கை முறையீட்டை கொடுக்கலாம் என கு.வி.மு.ச. 2(1) சொல்கிறது.
2) ஒரு வழக்கில் வக்கீல் அல்லாத ஒரு நபரையும், ஒரு நீதிமன்றம் வழக்காட அனுமதிக்கலாம் என கு.வி.மு.ச. 2(17) சொல்கிறது. Cr.R.P 29-ம் அவ்வாறே சொல்கிறது.
3) காவல் அலுவலர் ஒரு புகாரைப் பெற்று F.I.R. போட்ட பிறகு சம்மந்தப்பட்ட சாட்சியங்களை திரட்டுவதற்காக புலனாய்வு செய்திட வேண்டும் என கு.வி.மு.ச. 2(ஏ)/ 2(8) சொல்கிறது.
4) ஒருவர் ஒரு நிலத்தை, மனையை 12 ஆண்டுகள் அனுபவித்து வந்தால், அதற்கான ஆதாரங்களை காட்டினால் அந்த இடம் சட்டப்படி அவருக்குச் சொந்தமாகும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பாகியிருக்கிறது (ஆகஸ்ட் 8.2019).
5) ஒரு அரசு ஊழியர் தான் பணி செய்யும்போது தவறு என்று தெரிந்தே ஒரு தவறைச் செய்தால் அவரை நீதிமன்றக் கூண்டில் ஏற்றிடலாம் என கு.வி.மு.ச. 197 சொல்கிறது.
6) ஒரு நீதிபதி, தான் தீர்ப்பு வழங்கும்போது அநியாயமான தீர்ப்பு என்று தெரிந்தே ஒரு தீர்ப்பு வழங்கினால், 7 ஆண்டுகள் வரை அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என இ.த.ச. 219 சொல்கிறது.
7) ஒரு குற்ற நிகழ்வை தன் கண்களால் பார்த்தவர்கள் நீதிமன்றத்தில் சாட்சியாக கூண்டில் ஏறி சொல்லலாம் என இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 60 சொல்கிறது.
8) ஒரு காவல் அதிகாரி ஒரு புகாரைப் பெற்றவுடன் மனு ரசீது கொடுத்தலும் தி.மி.ஸி. பதிவும், உடனே செய்திட வேண்டும் எனவும், அதன் பிறகுதான் AWEIPSO lite கிட வேண்டும் எனவும் கு.வி.ம.ச. 154 சொல்கிறது.
9) ஒவ்வொரு தனி நபரும் சமூகத்தில் நடக்கிற குற்றங்கள் பற்றி (I.P.C.-ன் கீழ் காவல்துறைக்கு அல்லது நீதிமன்றத்திற்கு புகார் கொடுக்க வேண்டும் என கு.வி.மு.ச. 39 சொல்கிறது.
10) மேற்சொல்லப்பட்ட குற்றங்கள் பற்றி கிராம நிர்வாக அலுவலரும் காவல் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ புகார் கொடுக்க வேண்டும் என கு.வி.மு.ச. 40 சொல்கிறது.
11) ஒரு காவல் அதிகாரி F.I.R. பதிவு செய்தவுடன் புகார் கொடுத்தவருக்கு இலவச F.I.R. காப்பி உடனே கொடுக்க வேண்டும் என கு.வி.மு.ச. 154(2)(1) சொல்கிறது.
12) காவல் அலுவலர் ஒரு புகாருக்கு F.I.R. பதிய மறுத்தால் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு புகாரின் நகலை அனுப்ப வேண்டும் என கு.வி.மு.ச. 154(3) 1 சொல்கிறது.
13) மேற்கண்டவாறு புகாரை அனுப்பிவிட்டு F.I.R. காப்பியை தகவலாக கேட்கலாம் என தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 சொல்கிறது.
14) கொடுத்த புகாரின்படி செய்த விசாரணை அறிக்கையின் நகலை அந்த நடவடிக்கை பற்றிய விபரத்தை புகார் கொடுத்தவருக்கு காவல் அதிகாரி தெரிவிக்க வேண்டும் என கு.வி.மு.ச. 157(2) சொல்கிறது.
15) ஒவ்வொரு காவல் அதிகாரியும், 24 மணி நேரத்தில் ஒவ்வொரு 1/2 மணி நேரமும் என்னென்ன செய்கிறார் என காவல்நிலைய டைரியில் எழுத வேண்டும் என கு.வி.மு.ச. 172(1) சொல்கிறது.
16) ஒரு காவல் அதிகாரியிடம் F.I.R. காப்பி கொடுத்தாரோ அவரிடம் தாம் எடுத்த நடவடிக்கை பற்றி தகவல் சொல்லவேண்டும் என கு.வி.மு.ச. 173(2) ii சொல்கிறது.
17) பாதிக்கப்பட்ட யார் வேண்டுமானாலும் குற்றம் பற்றி கோர்ட்டில் புகார் கொடுக்கலாம், காவல் நிலையம் செல்ல வேண்டியதில்லை என கு.வி.மு.ச. 200 சொல்கிறது. இதற்கு Private Complant (தனியார் வழக்கு) என்ற பெயர்.
18) காவல்நிலைய அதிகாரி F.I.R. போடாமல் இருந்தால் F.I.R. போட்டு விசாரணை நடத்தச் சொல்லி கோர்ட் உத்தரவு இடலாம் என கு.வி.மு.ச. 156(3) சொல்கிறது.
19) ஒரு நீதிமன்றம் சம்மந்தப்பட்ட யாரை வேண்டுமானாலும் அழைத்து சாட்சியாக விசாரிக்க முடியும் என கு.வி.மு.ச. 311 சொல்கிறது.
20) ஒருவர்மீது F.I.R.. போட்டு அவரை காவல்துறை கைது செய்தாலும் செய்யலாம். ஆனால் தாம் அந்த குற்றத்தை செய்யவில்லை என நினைத்தால் அவருக்கு கோர்ட் ஜாமீன் வழங்க வேண்டும் (எதிர்பார்ப்பு பிணை) – (Anti-Bail) என கு.வி.மு.ச. 438 சொல்கிறது.
21) கீழ்நிலை நீதிமன்ற நீதிபதிகள் முறையாக வழக்குகளை நடத்துகிறார்களா என்பதை கண்காணிக்க உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரமும், உரிமையும் உண்டு என கு.வி.மு.ச. 483 சொல்கிறது. ஆகவே நீதிபதிகள் தவறு செய்தால் அநியாயமான தீர்ப்பு சொன்னால் உயர்நீதிமன்றத்தில் புகார் அளிக்கலாம்.
22) ஒரு காவல் அதிகாரி சட்டப்படி மேல் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டிய அறிக்கைகளை முறைப்படி அனுப்ப தவறினால், அது 1 மாதம் சிறை தண்டனை பெற வேண்டிய குற்றமாகும். ரூ.500/- அபராதம் கட்டவேண்டும் என I.P.C.176 சொல்கிறது.
23) ஒரு நீதிபதி தவறான தீர்ப்பு வழங்கினால் அதை யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் என I.P.C.499 விதிவிலக்கு சொல்கிறது.
24) கோர்ட்டில் தன் வழக்கில் தானே ஆஜராகலாம் என கு.வி.மு.ச. 3020, 3022 சொல்கிறது.
25) வழக்கறிஞருக்கு படிக்காதவர்களும், கோர்ட்டில் தனக்காகவோ அல்லது பிறருக்காகவோ 3 ஆண்டுகள் வழக்காடினால், பார் கவுன்சிலில் பதிவு செய்து வக்கீல் ஆகலாம் என Advocate Act Sec.28, 32 சொல்கிறது.
26) பாதிக்கப்பட்ட எவர் ஒருவருக்கும் கோர்ட் இலவச சட்ட உதவி செய்ய வேண்டும் என கு.வி.மு.ச. 304 சொல்கிறது.
27) ஒரு புகாரை ஒரு நபர் எழுதி அதை கோர்ட்டுக்குப் பதிவு தபாலில் அனுப்பி வைக்கலாம் என கு.வி.மு.ச. 2(ஈ) சொல்கிறது. அதாவது வாய்மொழியாக கூட நீதிபதியிடம் முறையிடலாம் என சொல்கிறது.
28) நமது இந்திய நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு (SC/ST) தீண்டாமை கொடுமை எந்த வடிவத்தில் வெளிப்பட்டாலும் அது வன்கொடுமை என இந்திய அரசியல் சட்டம் கோட்பாடு 17 சொல்கிறது.
29) SC/ST இனத்தைச் சார்ந்திராத ஒரு அரசு ஊழியர் SC/ST இனத்தவர்க்குச் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய மறுத்தால் அது தண்டிக்கத்தக்க குற்றமாகும் என P.C.R. Act பிரிவு 4 சொல்கிறது.
30) SC/ST இனத்தைச் சேர்ந்த மற்றும் சேராத அரசு ஊழியர்கள் SC/ST மக்களுக்கும் மற்றவர்களுக்கும் தன் கடமையைச் செய்ய மறுத்தால் அது தண்டிக்கத்தக்க குற்றம் என I.P.C. 166, Cr.P.C. 197,Cr.P.C. 197, C.P.C. 80 சொல்கின்றன.
31) கீழ்நிலை காவல் அதிகாரிகள் தன் கடமைகளைச் செய்யத் தவறினால், மேல்நிலை காவல் அதிகாரிகளுக்கு புகார் தரலாம் என சொல்கிறது.
32) ஒவ்வொரு இந்திய குடிமகனும் நம் நாடு முன்னேறிட தன்னால் முடிந்த அளவு அல்லது பிறரோடு இணைந்து பாடுபட வேண்டும் என இந்திய அரசியல் சட்டம் கோட்பாடு 51-AJ சொல்கிறது.
33) நமது சமூகத்தில் ஒரு குற்றம் நடப்பதற்கு முன்பே அதை தடுக்க உரிய நடவடிக்கையை காவல்துறை எடுக்க வேண்டும் என கு.வி.மு.ச…
34) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி தனியார் துறையில் உள்ள தகவல்களைப் பெற அது எந்த அரசுத் துறை கட்டுப்பாட்டுக்குள் வருகிறதோ அந்த துறைக்கு மனு அனுப்பி பெறலாம்.
35) கட்டணத்திற்கு சேவை செய்யும் அனைத்து நிறுவனங்களின் சேவைகளில் குறைபாடு இருந்தால் அது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986-ன்கீழ் வரும்.
36) வெற்றுக் காசோலையை மோசடியாக தொகையை பூர்த்தி செய்து யாராவது பொய் வழக்குப் போட்டால் மைய சோதனை மூலம் (Ink Test) அதை முறியடிக்கலாம் என குவி.மு.ச. 293 சொல்கிறது.
37) ஒரு நீதிபதி ஒரு புகாரை காவல்துறையிடம் இருந்தும் மற்றும் தனி நபரிடம் இருந்தும் பெற்று விசாரணைக்கு ஏற்கலாம் என கு.வி.மு.ச. 190 சொல்கிறது.
38) ஒரு தலித் SC/ST நபரை உயர் சாதியைச் சேர்ந்தவர் எவரேனும் அவமரியாதை செய்தால் கேவலப்படுத்தினால் அது சாதிய வன்கொடுமை என P.C.R. Act பிரிவு 302, 10 சொல்கிறது.
39) ஒரு தலித் SC/ST இடத்தை, நிலத்தை உயர் சாதிக்காரர்கள் அபகரித்துக் கொண்டால் அது தீண்டாமை வன்கொடுமை என றி.சி.ஸி. கிநீt பிரிவு 304 சொல்கிறது.
40) ஒரு காவல் அதிகாரி F.I.R. பதிவு செய்தவுடன் அதனை 6 நகல்கள் எடுத்து, நீதிபதி, SP பதிவேட்டு கூடம், புகார்தாரருக்கு இலவச காப்பி கொடுக்க வேண்டும் என Police Standing Order 552 சொல்கிறது.
41) நமது நாட்டில் யார் வேண்டுமானாலும் உரிய பயிற்சி இருந்தால் எந்த தொழிலை வேண்டுமானாலும் செய்யலாம் என இந்திய அரசியல் சட்டம் கோட்பாடு 190-G சொல்கிறது.
42) நீதிபதிகள் வேண்டுமென்றே தவறு செய்தால் அவரைப் பற்றிய புகாரை உயர்நீதிமன்றத்தில் உள்ள Judicial Vigilance Cell-க்கு புகார் அனுப்பலாம்.
43) ஒரு வக்கீல் நோட்டீசை பெற்றுக் கொண்டவர் அதற்கு பதில் தர மறுத்தால் அவர் அந்த தவறை ஒத்துக் கொண்டதாக பொருள் என I.E.A.106 சொல்கிறது.
44) காவல் அதிகாரிகள் ஒவ்வொரு 1/2 மணி நேரமும் டைரி எழுதுகிறார்களா என சோதனை செய்திட அவைகளை கோர்ட்டுக்கு கொண்டு வரச் சொல்லி யார் வேண்டுமானாலும் மனு கொடுக்கலாம் என கு.வி.மு.ச. 397 சொல்கிறது.
45) பாதிக்கப்பட்ட ஒருவர் எப்படி எல்லாம் ஜாமீன் (Bail) பெறலாம் என்பது பற்றி கு.வி.மு.ச. 436 முதல் 450 வரை தெளிவாக சொல்கிறது.
46) லஞ்சம் பெற ஒரு அரசு ஊழியர் முயற்சி எடுத்தாலும் அது 3 ஆண்டுகள் தண்டிக்கத்தக்க குற்றம் என ஊழல் தடுப்புச் சட்டம் 1988 விதி 15 சொல்கிறது.
47) ஒரு அரசு ஊழியர் ரூ.5000/-க்கு மேல் மதிப்பு உள்ள சொத்து வாங்கினாலும், விற்றாலும் அரசு அனுமதி பெற வேண்டும் என அரசு நடத்தை விதி கான்டக்ட் ரூல்ஸ் சொல்கிறது.
48) ஜாமீனில் விடக்கூடிய (Bailable Offences) குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தால் அவர் சொந்த ஜாமீனில் ஜாமீன்தாரர்களை ரெடி பண்ணி, வெளியே வரலாம் என கு.வி.மு.ச.50(2) சொல்கிறது.
49) ஒரு வங்கி மேலாளர் கடன் தர மறுத்தால் ரிசர்வ் வங்கியில் உள்ள Banking Ombudsman பிரிவுக்கு புகார் அனுப்பினால் உடனே கடன் கிடைக்கும் என வங்கிச் சட்டம் சொல்கிறது.
50) ஒரு வங்கி மேலாளர் கடன் தர மறுத்தால் அந்த வங்கியின் உயர் அதிகாரிக்கு விண்ணப்பம் அனுப்பிவிட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விபரம் கேட்டால் பலன் கிடைக்கும்.
51) குற்றவாளிகளை பொது மக்களும் கைது செய்யலாம் என கு.வி.மு.ச.43 சொல்கிறது.
52) ஒரு மனிதனுடைய வாழ்க்கை சட்டத்திற்கு புறம்பாக பாழடிக்க படக்கூடாது, தப்பு செய்திருந்தால் சட்டப்படி தண்டிக்கப்படலாம் என இந்திய அரசால் சட்டம் கோட்பாடு 21 சொல்கிறது.
53) காவல் நிலையத்தில் உள்ள கோப்புகளை, டைரியையும் சேர்த்து யார் வேண்டுமானாலும் கு.வி.மு.ச. 397-ன் கீழ் கோர்ட்டுக்கு கொண்டு வரலாம்.
54) கோர்ட்டில் உள்ள எந்த வழக்கிற்குரிய தீர்ப்பு நகலையும் யார் வேண்டுமானாலும் கு.வி.மு.ச. 363(6)-ன்கீழ் பெறலாம்.