தஞ்சை மாவட்டம், பேராவூரணியை அடுத்த நவக்கொல்லைக்காட்டில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச் சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், நீதியின் நுண்ணறிவு புலனாய்வு இதழின் ஆசிரியருமான இரா.சிவகுமார் இல்ல திருமண விழா அவரின் இல்லத்தில் நடைபெற்றது.
மணமக்கள் தினேஷ்குமார் – ரேஷ்மா இவர்களின் திருமண விழாவிற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மாநில தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ராஜன், இணைச் செயலாளர் கிருஷ்ணவேணி, துணைச்செயலாளர் வினோத், மாநில அமைப்பு செயலாளர் விஜயகுமார், மண்டல அமைப்புச் செயலாளர் சரண், உதவி செய்தி மக்கள் தொடர்பாளர் செந்தமிழ் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருமண விழாவில் நீதியின் நுண்ணறிவு இணைஆசிரியர் சாம்சன் செல்வகுமார், துணைஆசிரியர்கள் கணேசபாண்டி, விஜய், சண்முகம், மாவட்ட நிருபர்கள் ஜேம்ஸ் என்ற பெருமாள், ஜோயல், சிவராஜ், சுபாஷ்சந்திரன், தேவராஜ், நிருபர்கள் வின்சென்ட் ராஜ்குமார், விஜய், அருண்குமார், கார்த்திக், வேதகுஞ்சருளன் மற்றும் கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட பத்திரிகை துறையினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
விழாவில் கலந்து கொண்ட பத்திரிகை நண்பர்கள், காவல்துறை நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைவருக்கும் இரா.சிவகுமார் குடும்பத்தினர் சார்பாக நன்றிகள்..!