தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக பொதுமக்களிடமிருந்து செல்போன்கள் திருட்டு போயின இதனையடுத்து சைபர் கிரைம் மற்றும் காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார் மனுவின் அடிப்படையில் தஞ்சை மாவட்ட எஸ்.பி ரவளிபிரியா புகார் மனுக்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
அதன் பேரில் சுமார் 13 லட்சம் மதிப்பில் 130 ஆண்ட்ராய்டு செல்போன்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தார். பின்னர் பண இழப்பு மற்றும் சைபர் குற்றங்கள் நடைபெற்றால் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் இலவச தொலைபேசி 155260 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்