சென்னையிலிருந்து 03.10.2021-ம் தேதி காலை சைக்கிள் பயிற்சியில் பயணத்தை மேற்கொண்ட தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் /படைத்தலைவர் முனைவர் சி.சைலேந்திரபாபு இ.கா.ப. செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது காவல்துறை அதிகாரிகளிடம் சட்டம் & ஒழுங்கு பிரச்சனை குறித்து கேட்டறிந்தார். பின்னர் செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சாலையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர்கள் குடும்பத்தாரிடையே அங்குள்ள குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் கையெழுத்திட்ட புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கினார்.