பத்திரப்பதிவு தொடர்பான தங்கள் குறைகளை தெரிவிக்க, திங்கள்கிழமை தோறும் சார் – பதிவாளர் அலுவலகங்களில் குறை தீர்வு முகாம்கள் நடத்த பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 575 சார்- பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இங்கு, பத்திரப் பதிவுக்காக வரும் மக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க, தலைமையகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, திங்கள்கிழமை தோறும் சார் – பதிவாளர் அலுவலகங்களில், மக்கள் குறை தீர்வு முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. காலை 10:00 முதல் பகல் 1:00 மணி வரை மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படும்.இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்களை வரிசைப்படுத்தி பதிவு செய்வது, நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பணிகளுக்காக, ஒன்பது கட்டளைகள் அடங்கிய அரசாணையை, வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி பிறப்பித்துள்ளார்.