புதுக்கோட்டை மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த (இருசக்கர காவல் ரோந்து வாகன Beat System முறை) காவல் ரோந்து வாகனங்களை திருச்சி சரக காவல் துணைத் தலைவர் கி. சரவண சுந்தர் IPS அவர்கள் துவங்கி வைத்து நடவடிக்கை…
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களது உத்தரவுப்படி திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் மற்றும் சரக காவல்துறை துணைத் தலைவர் ஆகியோர்களது ஆலோசனைப்படி ரவுடிசம், கொலை, கொள்ளை மற்றும் திருட்டு போன்ற குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு திருச்சி சரகத்தில் உள்ள புதுக்கோட்டை, திருச்சி, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் 51 மாவட்டங்களில் 24X7 மணிநேரமும் இருசக்கர காவல் ரோந்து வாகன ( Beat System ) முறை கொண்டு வரப்பட்டுள்ளது . புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர காவல் நிலையம், கணேஷ் நகர் காவல் நிலையம், திருக்கோகர்ணம் காவல் நிலையம், அறந்தாங்கி காவல் நிலையம் மற்றும் ஆலங்குடி காவல் நிலையங்கள் பெரிய காவல் நிலையங்களாகவும் (Heavy), பத்து காவல் நிலையங்கள் நடுத்தர காவல் நிலையங்களாகவும் (Medium), இதர 23 காவல் நிலையங்கள் சிறிய காவல் நிலையங்களாகவும் (Light) கணக்கீடு செய்யப்பட்டு, பெரிய காவல் நிலையங்களுக்கு தலா 3 இருசக்கர ரோந்து வாகனங்களும், நடுத்தர காவல் நிலையங்களுக்கு தலா 2 இருசக்கர ரோந்து வாகனங்களும், சிறிய காவல் நிலையங்களுக்கு தலா 1 இருசக்கர ரோந்து வாகனமும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய சரகங்களில் 24 மணிநேரமும் வாக்கி டாக்கியுடன் ரோந்து பணியில் இருப்பார்கள்.
மேற்படி இருசக்கர ரோந்து வாகன முறையை (Beat System) 01.10.2021 -அன்று திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் கி. சரவண சுந்தர் இ.கா.ப., அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்திலிருந்து கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்களும் புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திருமதி. கீதா, திருமதி. ஜெரினா பேகம், ராஜேந்திரன், ஆறுமுகம் மற்றும் அனைத்து உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 43 ரோந்து வாகன காவலர்களும் கலந்து கொண்டார்கள். மேலும் ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகராஜ் மற்றும் ஆயுதப்படையினர் இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்தார்கள்.