சேலம் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகமும், சேலம் மாவட்ட சிலம்பாட்டக் கழகமும் இணைந்து நடத்திய 39வது தமிழ்நாடு மாநில சப் ஜூனியர் சிலம்பம் சாம்பியன்ஷிப் 2020 – 2021 ல் சென்னை மாவட்ட அணி 27 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. இப்போட்டிக்கு தேசிய நடுவர்கள் S. சதீஷ் குமார், S. சந்தீப் குமார் பொறுப்பு வகித்தனர்
.
சிலம்பாட்டக் கழகத்தின் சென்னை மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் J.சீனிவாசன், மாவட்ட துணை தலைவர் P.முத்தமிழ் பாண்டியன், மாவட்ட சட்ட ஆலோசகர் A. கவிமணி ஆகியோர் வாகை சூடிய மாணவ, மாணவியருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
பயிற்சியாளர்கள் M.ஹரிஹரன், T.பிரவின் ஆகியோரது அயராத முயற்சியால் இக்குழுவினர் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றனர். N.G.பிரதிபா, N.ஹரிணி, B.ஸ்ரீராம், J.டேனியல் மனோஜ், S.சேஷா அஹமத் P.கனிஷ்கா, S.K.அகல்யா. M.யாஷிகா ஆகிய வெற்றியாளர்கள் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றதன் மூலம் சென்னை மாவட்ட சிலம்பாட்ட கழகத்திற்கு பெருமையை சேர்த்தனர்.
மேலும், சென்னை மாவட்டம் சார்பாக D.நவோமிகா, V.மேகவர்ஷினி, G.நவீன், M.நாகேஷ்வரன், E.சதீஷ் குமார் ஆகியோர் பெருமைமிகு இப்போட்டியில் பங்கேற்றதன் மூலம் ஊக்கமும், உற்சாகமும் பெற்றனர்.