தஞ்சை மாவட்டம்,பேராவூரணியை அடுத்த செருவாவிடுதி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க ,தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவுக்கிணங்க, தஞ்சை மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தரராஜன் தலைமை வகித்தார். மருத்துவர்கள் வெங்கடேஷ், தீபா , கோகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.