01.10.2021 அன்று திருச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 30 சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு காவல் நிலையங்களில், பொது மக்களின் பிரச்சனைகளை விரைந்து அணுகி உதவும் வகையில் Beat Officer எனும் புதிய பிரிவினை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் V. பாலகிருஷ்ணன் IPS., அவர்கள் தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் A. சரவண சுந்தர் IPS., அவர்களும் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர். பா.மூர்த்தி IPS., அவர்களும் முன்னிலை வகித்தனர்.
Beat Officer எனும் புதிய ரோந்து பிரிவானது பொது மக்களின் பிரச்சினைகளை விரைந்து அணுகி தீர்வு காணவும், தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரவுடிகள் மற்றும் சரித்திர குற்றவாளிகளை நாள்தோறும் கண்காணிப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறியதாவது பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை, தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலைய தொலைபேசி எண்ணிற்கோ அல்லது 100 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.