தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் கட்டையன்காடு, பாலத்தளி வழியாக செல்லும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு அதில் இடைஇடையே சிறிய பாலங்கள் நிறைய கட்டப்பட்டுள்ளது. ஆனால் ஒட்டங்காடு கடை தெருவில் உள்ள பாலம் மட்டும் இடிக்கவும் இல்லை. கட்டவும் இல்லை. இந்தப் பாலம் கணக்கில் உள்ளதா? என்று தெரியவில்லை. மிதியக்குடி பாசன வாய்க்கால் இதன்வழியாக செல்கின்றது. சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக முற்றிலும் மூடப்பட்டுள்ளது. ஒட்டங்காடு கடை தெருவில் நிறைய ஆக்கிரமிப்புகள் உள்ளது. இது சம்பந்தமாக நாம் துறை அதிகாரிகளிடம் சில விளக்கங்கள் கேட்டுள்ளோம். அரசியல் பின்புலத்தினால் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளும், கட்டிட ஆக்கிரமிப்புகளும் அதிகம் உள்ளது. இதன் முழுவிவரங்களையும் எழுதி அடுத்த மாத இதழில் வெளியிட உள்ளோம். அதற்குள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மிதியக்குடி பாசன வாய்க்காலை கண்டுபிடித்து எங்கே தொடங்கி, எங்கே முடிகிறது? அதன் அளவு எவ்வளவு என்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டி ஒட்டங்காடு பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றார்கள்.
– மேலும் விவரங்கள் அடுத்த இதழில்