தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, ஆதனூர் கிராமத்தில் வசித்து வருபவர் வேத.குஞ்சருளன். இவர் நுண்ணறிவு மாத இதழின் தஞ்சை மாவட்ட நிருபர் ஆவர். இவர் கடந்த 30 ஆண்டுகளாக செய்துவரும் பொதுநல சேவையை பாராட்டி ஜெர்மனி பல்கலைக்கழகம் 2018ம் ஆண்டு “முனைவர் “பட்டமும், 2019ம் ஆண்டு ”பாரதகலாரத்னா “பட்டமும் கொடுத்து கௌரவப்படுத்தியது. தற்போது தொடர்ந்து பெய்துவந்த தொடர் மழை காரணமாக இவரின் ஓட்டு வீடு திடீரென சரிந்தது. நல்லவேளை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பொருள்கள் அடிப்பட்டு பாதிப்பாகியும், ஆவணங்கள் பெய்துவந்த மழையில் நனைந்து சேதமடைந்துவிட்டது. தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக், காவல்துறை தனிப்படை சிவக்குமார், உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட வீட்டை பார்வையிட்டு சென்றனர். பாதிக்கப்பட்ட அவரின் குடும்பத்தினருக்கு, நுண்ணறிவு மாத இதழ் குடும்பம் சார்பாக ஆறுதலை தெரிவிக்கிறோம்.

