தஞ்சை மாவட்ட பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள ஒட்டங்காடு ஊராட்சியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் திருமதி பானுமதி அவர்கள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தபோது ஒட்டங்காடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட மெர்குரி விளக்கு துருப்பிடித்து கிடக்கின்றது. 10 ஆண்டுகளாக யாரும் இதை பார்க்கவில்லை. ஊராட்சி செயலாளரை கேட்டாலும், நாங்கள் தீர்மானம் போட்டு ஙிஞிளி அவர்களுக்கு அனுப்பினோம். ஆட்சி மாற்றம் என்பதால் கிடப்பில் உள்ளது என்று பதில் அளித்தார். ஆளும் கட்சி ஊராட்சி மன்ற தலைவர் தான் தற்போது இருக்கிறார். அவர் பதவி ஏற்று இன்று வரை இந்த மெர்குரி விளக்கை கண்டுகொள்ளவில்லை. 9 கிராம மக்களின் கோரிக்கை இந்த மெர்குரி விளக்கு ஒட்டங்காட்டிற்கு வெளிச்சம் தருமா?