தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள இந்திராநகர் கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தின் வடக்கு பதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடுபத்தினர் வசித்து வருகின்றனர்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி சார்பில் சிகப்பு கப்பியினால் சாலை போடப்பட்டது. காலப்போக்கில் சிகப்பு கப்பிகள்அரிக்கப்பட்டு இப்போது களிகலந்த மண் சாலையாக காணப்படுகிறது. சாலையிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரம் உள்ள வடக்கு பகுதியின் முடிவில் குடிநீர் தொட்டி உள்ளது. இதில் சுமார் 30 குடும்பத்தினர் குடிநீர் எடுக்க இந்த இந்த குடிநீர் தொட்டியை பயன்படுத்தி வருகின்றனர். கோடைகாலங்களில் பொதுமக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் மழைக்காலங்களில் களிகலந்த மண் சாலை என்பதால் சேரும், சகதியுமாக நடந்தால் வழுக்கிவிழும் நிலையில் இந்த சாலை உள்ளது. மழைக்காலங்களில் குடிநீர் எடுக்கவோ, அத்தியாவசியபொருள்கள் வாங்குவதற்கு செல்ல இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேலும் கால்நடைகளை மேய்ப்பதற்கு ஓட்டிச்செல்லவோ, மழைக்காலங்களில் இப்பகுதியில் ஏதேனும் இறப்பு ஏற்பட்டால் சடலத்தை கொண்டு செல்லவதும் மிகுந்த கஷ்டமாக உள்ளது. இதுகுறித்து ஊராட்சி மன்றத்தில் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறுகின்றனர். இது சம்பந்தமாக சட்டமன்ற உறுப்பினரோ அல்லது மாவட்ட ஆட்சியாளரோ எங்களுக்கு உதவி, சாலை வசதி ஏற்படுத்திதர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
- Dr. வேத குஞ்சருளன்