தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், புத்தூர் கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளிடம் வெள்ளப் பாதிப்புகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, இ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவ.வீ.மெய்யநாதன், சி.வி.கணேசன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம், பெரியக்கோட்டையில் மழை வௌ¢ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு, விவசாயிகளிடம் வௌ¢ளப் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, இ.பெரியசாமி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.