மாதவரம் பால் பண்ணை பகுதியில் சாலையில் கிடந்த ரூ.91,000/- அடங்கிய பணப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த உதவி ஆய்வாளர் பாபு என்பவரை. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னை பெருநகர காவல், சி-1 பூக்கடை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் உதவி ஆய்வாளர் திரு.ஸி.பாபு என்பவர் கடந்த 20.11.2021 அன்று இரவு பணிமுடித்து பெரிய மாத்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, மாதவரம் பால் பண்ணை ரோட்டில் உள்ள வங்கி ஏடிஎம் மையம் எதிரிலுள்ள சாலையில் ஒரு பை (Bag) இருந்ததை கண்டு பையை திறந்து பார்த்தபோது, பையில் பணம் இருந்தது தெரியவந்தது. அங்கு ஆட்கள் யாருமில்லாததால், உதவி ஆய்வாளர் பாபு மேற்படி பணப்பையை வி-2 மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் ஒப்படைத்ததின்பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
காவல் குழுவினர் பையை திறந்து பார்த்தபோது, அதில் ரூ.91,000/- பணம் இருந்தது தெரியவந்தது. வி-2 மாதவரம் பால் பண்ணை காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து உரிய சட்ட நடவடிக்கைகளின்படி மேற்படி பணம் அடங்கிய பையை உரியவரிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாலையில் கிடந்த பணத்தை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைத்த உதவி ஆய்வாளர் பாபு என்பவரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப.,அவர்கள் 26.11.2021 அன்று நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.