திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய், குழந்தைகள் கடத்தல் தடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு ஏடிஎஸ்பி பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு தலைமை வகித்துமாவட்ட ஆட்சியர் சு.வினீத் பேசும்போது, ‘‘அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் வைக்க வேண்டும். அதில் ஏதேனும் பள்ளி மாணவ, மாணவிகள் புகார்கள் அளித்தால், தலைமை ஆசிரியர்கள் கண்ணியத்துடன் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1098, 181 மற்றும் 14471 ஆகிய இலவச எண்களை மாணவர்கள் பார்வையில்படும்படி, பள்ளியின் பல்வேறு இடங்களில் எழுதி வைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். புகார் பெட்டிகள் வைக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸார் செயலி ஏதேனும் இருந்தால், அவற்றையும் அங்கு விழிப்புணர்வுக்கு வைக்கலாம்,’’ என்றார்.